Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ரவுடியெல்லாம் அமைச்சரானா இப்படித்தான்!.. சேகர்பாபுவை தாக்கும் அண்ணாமலை!…

annamalai

தமிழகத்தில் எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட்ட வேண்டும் என பாஜக கருதுகிறது. தமிழக முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோரின் மறைவுக்கு பின் தமிழகத்தில் கால் ஊன்றும் வேலையில் பாஜக தீவிரமாக இறங்கியது. முதலில் அதிமுகவை கட்டுப்படுத்த துவங்கியது. பாஜக தலைமை என்ன சொல்கிறதோ அதை எடப்பாடி பழனிச்சாமி பின்பற்ற துவங்கினார். ஒருபக்கம் சசிகலாவை சிறைக்கு அனுப்பியதோடு சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை கட்சியை விட்டே நீக்கினார்கள்.

அதன்பின் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து சில தேர்தல்களில் போட்டியிட்டது. கடந்த பாரளுமன்ற தேர்தலில் அதிமுக படு தோல்வி அடையவே சுதாரித்த எடப்பாடி பழனிச்சாமி இனிமேல் பாஜகவுடன் கூட்டணி இல்லை என அறிவித்துவிட்டார். அதிமுகவை சம்மதிக்க வைக்க பாஜக எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தது.

இதைத்தொடர்ந்து திமுகவுக்கு சரியான எதிர்கட்சி நாங்கள்தான் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசி வருகிறார். அதிமுக உள்ளிட்ட மற்ற கட்சிகளை விட திமுகவை மட்டுமே குறிவைத்து விமர்சனம் செய்து வருகிறது பாஜக. அதோடு, டாஸ்மாக்கில் 1000 கோடி ஊழல் என செய்தி வெளியான நிலையில் அதற்கு எதிராக பாஜக போராட்டமும் நடத்தியது.

இந்நிலையில், மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக திருச்சியில் பாஜக சாரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை ‘சிறைக்கு சென்றவர்கள், மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்கள், கள்ளச்சாராயம் காய்ச்சியவர்கள் எல்லாம் சேர்ந்துகொண்டு தமிழ்நாட்டின் கல்விக்கொள்கை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். சென்னையில் ரவுடி சரித்திர பதிவேட்டில் இருந்தவர் அமைச்சர் சேகர்பாபு. இப்படிப்பட்டவர்கள் அமைச்சர்களாக இருந்தால் நாடு விளங்குமா?’ என காட்டமாக பேசியிருக்கிறார்.

Exit mobile version