Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எனக்கு இன்னொரு முகம் இருக்கு! தம்பி இது தமிழ்நாடு!

சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால் சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரம் நாட்கள் நெருங்க நெருங்க பரபரப்பாகி கொண்டே போகிறது.அதை விட மறுபுறமோ விமர்சனம் என்ற பெயரில் மற்றவர்களை தரம் தாழ்ந்து பேசுவது போன்ற நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், சமீபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயாரை அவதூறாக பேசிய விவகாரத்தில் தேர்தல் ஆணையம் மூலமாக சுமார் இரண்டு தினங்களுக்கு பிரச்சாரம் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறார் திமுகவைச் சார்ந்த ராசா.

அதேபோல திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பிரதமரையும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையும் குறிப்பிட்டு அவர்களுக்குள் என்ன உறவு இருக்கிறது என்று கொச்சைப்படுத்தி பேசினார் இதுவும் கண்டனத்திற்கு உள்ளானது.இந்த நிலையில்தான் மார்ச் மாதம் 31 ஆம் தேதி அரவக்குறிச்சி தொகுதி பள்ளப்பட்டியில் தேர்தல் பிரச்சாரத்தில் உரையாற்றிய பிஜேபியை சேர்ந்த அண்ணாமலை செந்தில்பாலாஜி எல்லாம் தூக்கிப் போட்டு மிதிப்பேன் என்கிற விதத்தில் பேசியிருக்கிறார்.

இதற்கு நேற்றைய தினம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் உரையாற்றிய திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி அரவக்குறிச்சியில் ஒரு வேட்பாளர் இருக்கிறார். அவர் தொகுதிக்குள் போய் எனக்கு இன்னொரு முகம் இருக்கிறது செந்தில் பாலாஜியை தூக்கி போட்டு மிதித்து விடுவேன் என்கிற ரீதியில் உரையாற்றி இருக்கிறார் நீ திமுககாரனை தொட்டுப்பாரு என்கிற ரீதியில் கனிமொழி பேசி இருக்கின்றார்.

இப்படி தேர்தல் பிரச்சாரம் அமைதியாக நடைபெற்ற காலம் எல்லாம் போய் தற்சமயம் பிரச்சாரம் என்ற பெயரில் அடிதடி ஆகும் அளவிற்கு பிரச்சாரம் செய்யும் ஒரு நிலை தமிழகத்தில் வந்திருக்கிறது. இந்த நிலை இப்படியே தொடருமானால் நிச்சயமாக எதிர்காலத்தில் தமிழகத்தின் நிலை என்னாகும் என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது.

Exit mobile version