Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உயிரை கொடுத்து பிரச்சாரம் செய்த அண்ணாமலை..கூலாக போன் பார்த்து கொண்டிருந்த தேஜஸ்வி..!!

Annamalai who gave his life and campaigned

Annamalai who gave his life and campaigned

உயிரை கொடுத்து பிரச்சாரம் செய்த அண்ணாமலை..கூலாக போன் பார்த்து கொண்டிருந்த தேஜஸ்வி..!!

முதல் கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், இன்னும் 6 கட்ட தேர்தல் அடுத்தடுத்து நடைபெற உள்ளது. அதன்படி 2ஆம் கட்ட தேர்தல் வரும் 26ஆம் தேதி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தமிழக பாஜக தலைவர்கள் அண்ணாமலை மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோர் கர்நாடகாவில் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

அதன்படி கடந்த இரு தினங்களாக கேரளாவில் பிரச்சாரம் செய்து வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று முதல் கர்நாடகாவில் பிரச்சாரம் செய்து வருகிறார். குறிப்பாக தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் அண்ணாமலை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிலையில் ஒரு தரமான சம்பவம் நடந்துள்ளது.

அதாவது அண்ணாமலை அவரின் நண்பரும் தற்போதைய எம்பியுமான தேஜஸ்வி சூர்யாவை ஆதரித்து கர்நாடகாவில் தீவிரமாக பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். ஒரு போன் போட்டால் பாஜக ஒடி வந்து உதவி செய்ய தயாராக இருக்கும் என்றெல்லாம் உயிரை கொடுத்து மைக்கில் கத்தி கொண்டிருந்தார்.

ஆனால் இது எதையும் கண்டுகொள்ளாத பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா அவரது மொபைலில் எதையோ ஆர்வமாக பார்த்து கொண்டிருந்தார். அண்ணாமலை என்ன பேசுகிறார் என்பதை கூட அவர் காது கொடுத்து கேட்கவில்லை. ஒருகட்டத்தில் பிரச்சாரத்தை நிறைவு செய்த அண்ணாமலை போனை கீழே வை என சைகை மூலம் தேஜஸ்வியை எச்சரித்தார். இதனை கண்ட பலரும் தேஜஸ்வியை கழுவி ஊற்றி வருகிறார்கள்.

Exit mobile version