நடிகர் அஜித் குமாருக்கு பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்திலும், திரையுலகிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் திரை உலகில் தனக்கென தனிப்பாதையுடன் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். 1990-ல் அமராவதி படம் மூலம் நாயகனாக களம் இறங்கிய நடிகர் அஜித்குமார், தன் நடிப்பாலும், தனிப்பட்ட சில செயல்களாலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே சேர்த்து வைத்துள்ளார்.
குறிப்பாக ரசிகர் மன்றத்தை கலைத்தது, பொது நிகழ்ச்சிகளை தவிர்ப்பது, உதவி செய்வது போன்ற அவரின் செயல்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாலுமே உள்ளது.
மேலும் அவரை சுற்றிய அரசியல் கருத்துகளும் அவ்வப்போது வெளிவரும். குறிப்பாக அரசியல் வட்டாரத்தில் நடிகர் அஜித் திமுகவுக்கு எதிரானவர் என்றும், அதிமுகவின் அதிமுகவிற்கு ஆதரவானவர் என்ற கருத்தும் நிலவி வருகிறது.
அதனை உறுதிப்படுத்தும் விதமாக அதிமுக தரப்பில் இருந்து பல்வேறு கட்டங்களில் நடிகர் அஜித் குமாருக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், நடிகர் அஜித்குமாருக்கு பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தன்னம்பிக்கையை மட்டும் துணையாகக் கொண்டு, எளிய பின்புலத்தில் இருந்து வந்து, தனது திறமையால் மக்களைக் கவர்ந்து, திரையுலகின் முக்கிய அடையாளங்களில் ஒருவராக உயர்ந்திருக்கும், நடிகர், சகோதரர் அஜித்குமார் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) May 1, 2024
அவரின் அந்த பதிவில், “தன்னம்பிக்கையை மட்டும் துணையாகக் கொண்டு, எளிய பின்புலத்தில் இருந்து வந்து, தனது திறமையால் மக்களைக் கவர்ந்து, திரையுலகின் முக்கிய அடையாளங்களில் ஒருவராக உயர்ந்திருக்கும், நடிகர், சகோதரர் அஜித்குமார் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அண்ணாமலையின் இந்த வாழ்த்து பதிவு அரசியல் வட்டாரத்திலும், திரையுலகிலும் பரபரப்பை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.