தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், தமிழகத்தில் மொத்தம் தனியார் பள்ளிகளில் மட்டும் 56 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர் என்றும் அவர்களில் 30 லட்சம் பேர் மும்மொழி கல்வியை படிக்கின்றனர் என்றும் தெரிவித்திருக்கிறார். மேலும் அரசு பள்ளிகளில் பயிலக்கூடிய 52 லட்சம் மாணவர்களுக்கு ஏன் மும்மொழி கல்வி பயிற்றுவிக்க கூடாது என்றும் அவர்களுக்கு மும்மொழி கல்வி வாய்ப்பு கிடைக்கக் கூடாதா ? என கேள்வி எழுப்பு இருக்கிறார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் எழுப்பிய இந்த கேள்விக்கு தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பு மையம் பதிலளித்திருக்கிறது. பாஜகவை தவிர தமிழகத்தில் வேறு எந்த கட்சியும் மும்மொழிக் கொள்கைக்கும் மறைமுக ஹிந்தி திணிப்பிற்கும் உதவுவதாக இல்லை. அதற்கு மாறாக அனைத்து கட்சிகளும் முன்மொழிக் கொள்கையை எதிர்க்கவே செய்கின்றனர்.
இப்படி இருக்கக்கூடிய சூழலில் பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் கேட்ட கேள்விக்கு தகவல் சரிபார்ப்பு மையம் அளித்த பதில் பின்வருமாறு :-
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் ஆட்சியில் இருந்த பொழுது தனியார் பள்ளிகளுக்கு ஒரு பாடத்திட்டம் எனவும் அரசு பள்ளிகளுக்கு ஒரு பாடத்திட்டம் எனவும் இருந்த நிலையில் சமச்சீர் கல்வியை அறிமுகம் செய்தார் என சுட்டிக்காட்டி இருக்கிறது.
மேலும் தற்பொழுது, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை 58,000 என்றும் அதில் தனியார் பள்ளிகளினுடைய எண்ணிக்கை 12,690 எனவும் சிபிஎஸ்சி பள்ளிகளின் உடைய எண்ணிக்கை 1835 எனவும் குறிப்பிட்ட தகவல் சரி பார்ப்பகம் இதில் எந்த பள்ளிகளிலும் இந்தி கட்டாயம் இல்லை என்றும் விருப்பப்பட்ட மாணவர்கள் எந்த மொழி வேண்டுமானாலும் பயிலலாம் என்றும் தெரிவித்திருக்கிறது.
குறிப்பாக தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 3.16% சதவிகித பள்ளிகளில் மட்டுமே இந்தி கட்டாயம் என்றும் மற்றபடி வேறு எந்த பள்ளிகளிலும் பொதுத் தேர்வில் ஹிந்தி மொழியானது இடம்பெறவில்லை எண்ணமும் சுட்டிக்காட்டி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களினுடைய கேள்விக்கு பதில் அளித்து இருக்கிறது தமிழக அரசின் உடைய தகவல் சரிபார்ப்பகம்.