Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அதகளப்படுத்தும் ரஜினி: வெளியானது அண்ணாத்த மோஷன் போஸ்டர்!

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று வெளியாகி சமூக வளைதளங்களில் பாராட்டுகளை குவித்துவருகிறது.

வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக அஜித் நடித்தவிஸ்வாசம் படத்தை இயக்கினார் சிவா. தற்போது ரஜினி நடிக்கும் படத்தை இயக்கியுள்ளார்.படத்தில் பர்ஸ்ட் லுக் வெளியான நிலையில் மோஷன் போஸ்டர் நேற்று வெளியாகி ரசிகர்களை குஷி படுத்தியுள்ளது.

நாடி , நரம்பு முறுக்க முறுக்க என தொடங்கும் பவர்புல் பன்ச் வசனம் , பைக், கார் சேசிங்க் என பட்டைய கலக்கும் ரஜினி இளம் ஹீரோக்களுக்கே சவால் விடும் அளவிற்கு இளைமையாகவும், ப்ரெஷ்ஷாகவும் தோன்றுகிறார். இதர்கு முன் வெளியான தர்பார் படம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறாததால் இந்த படத்தில் முழு ஒத்துழைப்புடன் ரஜினி நடித்துள்ள தகவல்கள் முன்னதாகவே வெளியாகின.

அண்ணாத்த படத்தில் நயன்தாரா, கீா்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ்
போன்றோர் நடித்துள்ளார்கள். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள அண்ணாத்த படம் தீபாவளிக்கு, நவம்பர் 4 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Exit mobile version