Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அண்ணாத்த திரைப்படம்! ரஜினியை சந்தித்த சிறுத்தை சிவா!

ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் சிறுத்தை சிவா அவர்களின் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் அண்ணாத்த, இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடர்பான தகவல் தற்சமயம் கிடைத்திருக்கிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட மற்றும் ஏ ஆர் முருகதாஸ் அவர்கள் இயக்கத்தின் தர்பார் என ரஜினியின் கடைசி இரு திரைப்படங்களும் மிக சுமாரான வரவேற்பையே பெற்றதாக தெரிவிக்கிறார்கள். அடுத்ததாக ரஜினிகாந்த் நடிப்பின் மிகப்பெரிய எதிர்ப்பரப்பில் உருவாக்கப்பட்டு வரும் திரைப்படம் அண்ணாத்த, அதற்கு காரணம் இருப்பதாக சொல்கிறார்கள். சிறுத்தை சிவா மூலமாக அஜித்துக்கு கிடைத்த வீரம், விவேகம், வேதாளம் விசுவாசம் என்று நான்கு படங்களுமே தொடர்ச்சியான வெற்றியை கொடுத்தது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் தயாராகி வரும் அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்துடன் நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் குஷ்பு மீனா சூரி உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க இருக்கிறார்கள். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, படப்பிடிப்பு நடக்காமல் இருந்தது முன்னரே 60 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், இந்த படக்குழு கடைசியாக இரண்டாம் கட்ட படப்பிடிப்பை கடந்த டிசம்பர் மாதத்தில் ஐதராபாத் பிலிம் சிட்டியில் ஆரம்பித்தது. படப்பிடிப்பு தளத்தில் வேலை பார்த்த சுமார் நான்கு நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட காரணத்தால், அதுமட்டுமல்லாமல் ரஜினிகாந்த அவர்களுக்கும் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டாலும் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

இந்தநிலையில், அண்ணாத்த திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் நான்காம் தேதி திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் ஜனவரி மாதம் 29ம் தேதி ரஜினியை போயஸ் தோட்ட இல்லத்தில் சென்று நேரில் சந்தித்து இருக்கிறார் இயக்குனர் சிறுத்தை சிவா.

கடைசியாக திரைப்படத்திற்கான மூன்றாவது கட்ட படப்பிடிப்பை மார்ச் மாதம் முதலில் ஆரம்பிக்கலாம் என்று திட்டமிடப்பட்டு இருப்பதாக சொல்கிறார்கள் படக்குழு. அதோடு ஒரே படப்பிடிப்பில் ஒட்டுமொத்த திரைப்படத்தையும் முடித்து விடவும் திட்டமிட்டிருக்கிறார்களாம். இதுவரையில் படமாக்கப்பட்ட காட்சிகளுக்கு எடிட்டிங் போன்ற வேலைகள் முடியும் தருவாயில் இருப்பதாக தெரிகிறது. இமான் அவர்களின் இசையில் திரைப்படத்திற்கான இசை பணிகளும் ஒருபுறம் மும்முரமாக நடந்து வருவதாகவும் சொல்கிறார்கள்.

Exit mobile version