Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தூத்துக்குடி மக்களே! அவசர உதவிக்கு இந்த எண்ணிற்கு அழையுங்கள்!

#image_title

தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் மக்கள் அத்தியாவசிய தேவைக்கு அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மக்கள் உணவு, மருத்துவம் ஆகிய அவசர உதவிக்கு இந்த உதவி எண்ணிற்கு அழைத்து புகார் தருவதால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகின்றது

 

தொடர்பு எண்:+91 80778 80779

 

இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பேசிய தூத்துக்குடி எம்பி கனிமொழி

 

மக்கள் அவசர தேவைகளுக்காக இந்த எண்ணை தொடர்பு கொண்ட அவசர உதவிகளை பெற்றுக் கொள்ளலாம் என்றும், இது வாட்ஸ் அப் செயலி மூலம் தங்களது புகார்களை தெரிவிக்க வேண்டும் என்றும், மேலும் தன் ஆர்வலர்கள் உதவ வேண்டும்,என்று நினைத்தால் இதில் இணைந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கயத்தாறு தேவர்குளம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் அங்கு பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

 

தூத்துக்குடி திருச்செந்தூர் ஆகிய பகுதிகளில் செல்லும் பேருந்துகள் வெள்ளத்தில் சிக்கியது அதனால் அந்த பகுதியிலும் பேருந்தும் முற்றிலும் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

கயத்தாறு பகுதிகளில் உள்ள பாலங்கள் நீரில் மூழ்கியுள்ளதால் அந்த வழியிலும் போக்குவரத்து முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அதை அறிந்து செயல்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version