கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! தமிழக பள்ளி திறப்பு பற்றிய நியூ அப்டேட்!

0
142
Good news for students! It starts on the 26th!

கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! தமிழக பள்ளி திறப்பு பற்றிய நியூ அப்டேட்!

கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.மக்களும் இந்த தொற்றிலிருந்து மீளுவதற்கு பெருமளவு முயற்சிகளை செய்து வருகின்றனர்.அதனையடுத்து தொற்று அதிகளவு பரவும் என்ற காரணத்தினால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டது.சிறிய வகுப்புகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அனைவருக்கும் ஆன்லைன் வகுப்புகள் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டது.

நாளடைவில் கொரோனாவின் தாக்கம் சிறிது குறைந்தும் அதிகரித்தும் காணப்பட்டதால் மாணவர்கள் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை.அனைவருக்கும் தேர்வின்றி தமிழக அரசு ஆள் பாஸ் செய்தது.மற்ற மாநில அரசுகளும் மாணவர்களுக்கு ஆள் பாஸ் செய்தனர்.இதுபோல இரு வருடங்கள் கடந்த நிலையில் மாணவர்களுக்கு பாட புத்தகங்களே மறக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது.தற்போது பல மாநிலங்களில் தொற்று குறைந்த நிலையில் மாணவர்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட் உத்தரவுகள் வெளியாகி வருகிறது.

இந்த கொரோனாவின் மூன்றாவது அலை உருவாகி தீவீரமடையும் என்றும் மருத்துவ வல்லுனர்கள் கூறி வருகின்றனர்.அதனால் நீட் தேர்வின் தேதியும் ஆகஸ்ட் மாதத்திலிருந்து செப்டம்பர் மாதத்திற்கு மத்திய அரசு தள்ளி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.அதனையடுத்து குஜராத்தில் தற்போது கொரோனா தொற்றின் பாதிப்பு குறைந்துள்ளது.அதனால் வரும் 15 ம் தேதி முதல் 8 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு கூறியுள்ளது.அதிலும் குறிப்பாக தொற்று குறிந்து காணப்படும் பகுதிகளில் உள்ள பள்ளிகள் மட்டும் திறக்கப்படுவதாக கூறியுள்ளனர்.

நேற்று புதுச்சேரியில் வரும் 16 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில முதலவர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.அத்ன்பாடு நமது தமிழகத்தில் எப்பொழுது பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை பத்திரிக்கையாளர்கள் தொடர்ந்து கேள்வி கேட்டு வந்தனர்.அதற்கு பொய்யாமொழி கூறியதாவது,தற்போது தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைந்த வண்ணமாகதான் உள்ளது.இந்நிலையில் மேற்கொண்டு ஆய்வு மேற்கொண்ட்ர் முதல்வரிடம் ஒப்புதல் கேட்கப்படும்.அதனையடுத்து முதல்வர் கூறும் அறிவுரைகளின் படி பள்ளிகள் திறக்கப்படும் எனக் கூறினார்.