அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த படிப்புகளுக்கு இன்று முதல் தொடங்கும் விண்ணப்ப பதிவு!
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அதனை தொடரந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கான வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.கல்லூரிகளில் நடைபெறும் செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டுதான் கொரோனா பரவல் குறைந்து வந்தது.அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது.
அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் முதுகலை பட்டப் படிப்புக்கான விண்ணப்ப பதிவுகள் இன்று முதல் தொடங்குகின்றது.இந்த விண்ணப்பம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.எம்பிஏ மற்றும் எம்சிஏ உள்ளிட்ட படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப படிவம் இந்த மாதம் 20 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனைதொடர்ந்து முதுகலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை பணிகள் முடிவடைந்த பிறகு இளங்கலை படிப்புகளுக்கான சேர்க்கை நடவடிக்கை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.