சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு! இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!
சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வட வானிலை நிலவக்கூடும். மேலும் தமிழகத்தில் தென்கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று மற்றும் நாளை லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும். அதனைத் தொடர்ந்து சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
அதிகபட்சம் வெப்பநிலையாக 33 மற்றும் 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்த வெப்பநிலை 22 மற்றும் 23 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் வடகிழக்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்றது. அந்த புயலுக்கு மாண்டாஸ் என பெயர் வைக்கப்பட்டது. அந்தப் புயலின் காரணமாக தமிழகத்தில் பலத்த மழை பெய்து ஒரு சில பகுதிகள் சேதம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.