Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! தீபாவளியை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வங்கி கணக்கில் பணம்!

announcement-made-by-the-chief-minister-bank-account-money-for-ration-card-holders-ahead-of-diwali

announcement-made-by-the-chief-minister-bank-account-money-for-ration-card-holders-ahead-of-diwali

முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! தீபாவளியை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வங்கி கணக்கில் பணம்!

இந்த மாதத்தின் இறுதியில் தீபாவளி பண்டிகை வருகின்றது.அதனால் புதுச்சேரி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.மேலும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தரமானதாகவும் விலையேற்றமின்றி மலிவாக கிடைக்க வழிவகை செய்துள்ளது.அந்த வகையில் புதுவை அரசின் கூட்டுறவு நுகர்வோர் இணையம் மூலமாக மளிகை பொருட்கள் விற்பனை செய்ய மக்கள் மளிகை சிறப்பு அங்காடி  நடத்தப்படுகின்றது.

மேலும் இங்கு சர்க்கரை ,மைதா,ரவா,சமையல் எண்ணெய் உள்ளிட்ட 25 பொருட்கள் அடங்கிய தொகுப்பு 800 ரூபாய்க்கு வரும் 24ஆம் தேதி அன்று விற்பனை செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.மேலும் இந்த சிறப்பு அங்காடி தட்டாஞ்சாவடி பகுதியில் முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார்.

இதனையடுத்து அவர் கூறுகையில் சிறப்பு அங்காடிக்கு ரூ 3.5கோடி மானியம் அரசு வழங்கி உள்ளது எனவும் கூறினார்.தட்டுப்பாடின்றி பொருட்கள் கிடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேலும் தீபாவளி திருநாளில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பத்து கிலோ அரிசி மற்றும் இரண்டு கிலோ சர்க்கரைக்கான தொகையை பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

Exit mobile version