Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தேர்தல் வாரியம் வெளியிட்ட அறிவிப்பு! வாக்காளர் இறுதி பட்டியல் வெளியீடு!

Announcement made by the Election Board! Publication of the final list of voters!

Announcement made by the Election Board! Publication of the final list of voters!

தேர்தல் வாரியம் வெளியிட்ட அறிவிப்பு! வாக்காளர் இறுதி பட்டியல் வெளியீடு!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ள,வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த நவம்பர் ஒன்பதாம் தேதி வெளியிடப்பட்டது. அதில் வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்ப்பது,அதிலுள்ள விவரங்களைத் திருத்துவது,நீக்கம் செய்வது உள்ளிட்ட பணிகளுக்கான ஒரு மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டது. டிசம்பர் எட்டாம் தேதி வாக்காளர் பட்டியல் திருத்தம் போன்ற பணிகள் நடைபெற்றது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் போன்ற பணிகளுக்காக அளிக்கப்பட விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டன.அதன் பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணியானது கடந்த நாட்களில் நடத்தப்பட்டது.அப்போது பட்டியல் தயாரான நிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

மாநகராட்சி அலுவலகங்கள்,வட்டாட்சியர் அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் பொது மக்களின் பார்வைக்காக இறுதி வாக்களர் பட்டியல் வைக்கப்படவுள்ளது.மேலும் மாநிலம் முழுவதுமான தகவல்களை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துளார்.அதனால் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள விண்ணப்பித்திருந்தால்  உங்களின் இறுதி பட்டியலை சரிபார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version