Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பதற்கான தேதி அறிவிப்பு!

ஆகஸ்ட் 17ஆம் தேதி சென்னையில் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவருடைய தலைமையில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க உத்தேசிக்கப்பட்டு ஆலோசனை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் முதற்கட்டமாக பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அனைத்துமே ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆண்டு இறுதித் தேர்வுகள் கூட கொரோனாவின் கோரத் தாண்டவத்தால் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பொதுத்தேர்வை எதிர்கொள்ள காத்திருந்த மாணவர்களுக்கும் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்த அரசு மாணவர்களுக்கு மதிப்பீடு முறையில் மதிப்பெண்கள் வழங்கியது. இதற்கிடையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள், தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆகியவை தீவிரப்படுத்தப்பட்டு வந்ததும், இதனால் தினசரி பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.

பல மாநிலங்களில் நோய்த்தொற்று நிலவரத்தை கருத்தில் கொண்டு மேல்நிலை வகுப்புகள் மட்டுமே செயல்பட்டு வருகிறது. அதேபோல் தமிழ்நாட்டிலும் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொதுத் தேர்வுகளை எழுத மாணவர்களுக்கு முதல் கட்டமாக நேரடி வகுப்புகளை தொடங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட உள்ளது. அதே போல் இதனை பரிசீலனை செய்ய தமிழக அரசு செப்டம்பர் 1 முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்கலாம் என்று ஆலோசனை செய்து வருகிறது.

அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும் பணியில்தான் கல்வி அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் ஆகஸ்ட் 17ஆம் தேதி சென்னையில் மாவட்ட கல்வி அலுவலர்கள், ஆலோசனை கூட்டம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பொய்யாமொழி அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது. அதில் பொது கருத்துக்கணிப்பு கேட்டு பள்ளி கல்வித்துறை உடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டு, அதன் பின் தகவல்கள் உறுதி ஆகும் என்று சொல்லப்படுகிறது.

Exit mobile version