Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மதுரை கோட்ட அதிகாரிகள் வெளியிட்ட அறிவிப்பு! இந்த இடங்களுக்கு செல்லும்  ரயில்களின் நேரம் மாற்றம்! 

Announcement released by Madurai Kottam Railway! Time change of trains going to these places!

Announcement released by Madurai Kottam Railway! Time change of trains going to these places!

மதுரை கோட்ட அதிகாரிகள் வெளியிட்ட அறிவிப்பு! இந்த இடங்களுக்கு செல்லும்  ரயில்களின் நேரம் மாற்றம்!

கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு டிசம்பர் 6ஆம் தேதி திருவண்ணாமலையில் மாலை 6 மணிக்கு மாகா தீபம் ஏற்றப்படும். அதனை காண அதிகளவில் பக்தர்கள் வருவதால் சிறப்பு பேருந்துக்குள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மதுரை கோட்ட ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் தென்மாவட்டங்களில் உள்ள ரெயில் தண்டவாள பகுதிகளில் பராமரிப்பு பணிகள் அதிகள் உள்ளது அதனால் அவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் அந்த  பாதைகளில் இயக்கப்படும் ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அந்த வகையில் மதுரையில் இருந்து காலை 11.30 மணிக்கு செங்கோட்டை புறப்படும் எக்ஸ்பிரஸ் கட்டண பாசஞ்சர் வண்டி எண் 06663 ரயில். செங்கோட்டையிலிருந்து காலை 11.50 மணிக்கு மதுரை புறப்படும் எக்ஸ்பிரஸ் கட்டண பாசஞ்சர் வண்டி எண் 06664 ஆகிய ரயில்கள் டிசம்பர் 6 ஆம் தேதி மற்றும் 7 ஆம் தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

மதுரையிலிருந்து விழுப்புரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வண்டி எண் 16868 டிசம்பர் 5 ஆம் தேதி முதல் டிசம்பர் 10 ஆம் தேதி வரை மற்றும் 12 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என் தெரிவித்துள்ளனர்.

ராமேஸ்வரத்திலிருந்து மதுரை செல்லும் எக்ஸ்பிரஸ் கட்டண பாசஞ்சர் வண்டி எண் 06654 ரயில் இன்று முதல் வரும் 31 ஆம் தேதி வரை வியாழக்கிழமைகள் தவிர மற்ற நாட்களில் ராமேஸ்வரத்தில் இருந்து காலை 11 மணிக்கு பதிலாக ஒரு மணி நேரம் தாமதமாக மதியம் 12 மணிக்கு புறப்படும்.

மேலும் மதுரையிலிருந்து கச்சக்குடா வாராந்திர சிறப்பு ரயில் வரும் 7 ஆம் தேதி மதுரையில் இருந்து அதிகாலை 5.30 மணிக்கு பதில் காலை 6.30 மணிக்கு புறப்படும் என் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version