Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த வேண்டுதல் நிறைவேற்ற டோக்கன் வழங்கப்படுகின்றது!

Announcement released by Tirupati Devasthanam! A token is issued to fulfill this request!

Announcement released by Tirupati Devasthanam! A token is issued to fulfill this request!

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த வேண்டுதல் நிறைவேற்ற டோக்கன் வழங்கப்படுகின்றது!

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் சாமி தரிசம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் முற்றிலும் குறைந்த நிலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கபடுகின்றனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவில் என்பது புகழ்பெற்ற தளங்களில் ஒன்றாக உள்ளது.ஏழுமலையான் கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர்.கடந்த இரு தினங்களுக்கு முன்பு தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தரிசனம் செய்ய ஏதுவாக இருக்கும் வகையில் தேவஸ்தானத்தின் இணையதளத்தில் சாமி தரிசனம் டிக்கெட் வெளியிடப்பட்டது.

அதனை தொடர்ந்து இன்று திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பில் வரும் டிசம்பர் மாதம் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அங்கப்பிரதட்சண டோக்கன் இன்று காலை பத்து மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது.அதனை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம்.

பக்தர்கள் நன்கு கவனித்து ஆன்லைனில் அங்கப்பிரதட்சண  டோக்கன் முன்பதிவு செய்து உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள நாட்களில் திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.

Exit mobile version