திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த தேதிகளில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் விண்ணப்பிக்கலாம்!
அதிகளவு பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்யும் கோவில்களில் ஒன்று திருப்பதி ஏழுமலையான் கோவில் தான்.இந்நிலையில் இங்கு பக்கதர்கள் அதிகளவில் வருவதால் கூட்ட நெரிசலை தவிர்க்க டைம் சிலாட் டோக்கன் முறையை அறிமுகம் படுத்தினார்கள்.
அந்த டோக்கன் மூலம் பக்கதர்கள் எந்த தேதியில் எந்த நேரத்தில் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என அனைத்தும் குறிப்பிடப்பட்டிருக்கும்.அதனை வைத்து பக்கதர்கள் சாமி தரிசனம் செய்தால் கூட்ட நெரிசல்கள் தவிர்க்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் ஜனவரி மாதத்திற்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் வரும் 12 ஆம் தேதி ஆன்லைனில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் திருப்பதி கோவிலில் ஜனவரி மாதம் நடைபெறும் கல்யாண உற்சவம் ,டோல் உற்சவம் ,ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்காரம் சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவைகளுக்கான டிக்கெட்டுகளும் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளனர்.
மேலும் இவை ஜனவரி மாதம் 12 ஆம் தேதி மதியம் மூன்று மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.அதனை முன்பதிவு செய்ய விரும்பும் பக்தர்கள் https://tirupatibalaji.ap.gov.in என்ற தேவஸ்தானம் இணையதளத்தில் சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் எலக்ட்ரானிக் குலுக்கலில் கலந்து கொள்ள சுப்ரபாதம், தோமாலை ,அர்ச்சனை போன்ற சேவைகளுக்கு 12 ஆம் தேதி 10 மணி முதல் 14 ஆம் தேதி காலை 10 மணி வரை பக்கதர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
ஜனவரி 1 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை வைகுண்ட ஏகாதசிக்கான சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.
அதன் காரணமாக அனைத்து சேவைகளும் 11 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.12 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் வெளியிடப்பட உள்ளனர்.அதனால் எந்த சேவைக்கு வேண்டுமானாலும் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவித்துள்ளனர்.