திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு இந்த விதிமுறைகள் கட்டாயம்!
திருப்பதி ஏழுமலையான் கோவிலிற்கு கடந்த புரட்டாசி மாதம் முதலில் இருந்து பக்தர்கள் அதிகளவு வர தொடங்கினார்கள்.அப்போது டைம் ஸ்லாட் முறை அறிமுகம் படுத்தப்பட்டது.மேலும் அந்த டோக்கன் முறையில் யார் எப்போது எந்த நேரத்தில் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என குறிப்பிடபட்டிருக்கும்.அந்த முறையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வரும்பொழுது கூட்ட நெரிசல் ஏற்படுவதை தடுக்க முடியும் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்தது.
இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் ஜனவரி 1 ஆம் தேதி புத்தாண்டு மற்றும் 2 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை வைகுண்ட வாயில் வழியாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.11 நாட்களுக்கும் ஒரு நாளொன்றுக்கு 20 ஆயிரம் டிக்கெட்டுகள் என 2.20 லட்சம் டிக்கெட்கள் நேற்று காலை 9 மணிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் இணையதளத்தில் வெளியானது.
அதனுடன் ரூ 300 சிறப்பு நுழைவு தரிசனம் டிக்கெட் வெளியிடப்பட்டது.இது மட்டுமின்றி திருப்பதியில் 9 இடங்களில் வைகுண்ட எகாதசிக்காக பத்து நாட்களுக்கு இலவச நேர ஒதுக்கீடு டிக்கெட் வரும் ஒன்றாம் தேதி முதல் வழங்கப்படவுள்ளது.நாளொன்றுக்கு 50 ஆயிரம் டிக்கெட்டுகள் வழங்கக்கூடிய நிலையில் முதலில் வரும் பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு டிக்கெட் வழங்கப்பட உள்ளது.
இந்நிலையில் தரிசனத்திற்கு வரக்கூடிய பக்தர்கள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் அல்லது 48 மணி நேரத்திற்கு முன்னதாக எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வரவேண்டும்.மேலும் முககவசம்,சமூக இடைவெளி கடைபிடிப்பது உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் இணையதளத்தில் அறிவிப்பு வெளியானது.