திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! காலை 10 மணி முதல் இதற்கான டிக்கெட் வெளியீடு!
பக்தர்கள் அதிகளவு சாமி தரிசனம் செய்யும் கோவில்களில் ஒன்றாக உள்ளது திருப்பதி திருமலை தான்.இங்கு கடந்த புரட்டாசி மாதம் அதிகளவு மக்கள் வருகை புரிந்ததால் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் முன்னதாக இருந்த டைம் ஸ்லாட் டோக்கன் முறை மீண்டும் அறிமுகபடுத்தபட்டது.இந்த டோக்கனில் பக்தர்கள் எந்தா நாளில் எந்த நேரத்தில் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என குறிப்பிடபட்டிருக்கும்.
அந்த நேரத்தில் அவர்கள் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு வரும் பொழுது கூட்ட நெரிசல் ஏற்படாது என கூறப்பட்டது.மேலும் திருப்பதி தேவஸ்தான் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் திருப்பதியில் ஜனவரி 12 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை சாமி தரிசனம் செய்ய ரூ 300 கட்டண டிக்கெட் இன்று காலை பத்து மணிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளனர்.
மேலும் குறிப்பாக திருப்பதியில் எழுமலையானை காண வரும் பக்தர்களுக்கு வசதியாக இருக்கும் வகையில் திருப்பதி தேவஸ்தான சார்பில் பக்தர்கள் தங்கும் விடுதிகள் கட்டப்பட்டுள்ளது.அதில் 6 ஆயிரம் அறைகள் வாடகைக்கு விடப்பட்டு வந்தது.அதனை தொடர்ந்து அங்கு சேதம் அடைந்த அறைகள் அனைத்தையும் 110 கோடி செலவில் தேவஸ்தானம் சார்பில் சீரமைக்கப்பட்டன.பக்தர்கள் தங்கும் காட்டேஜ் கெஸ்ட் ஹவுஸ்களில் ஏசி, வெந்நீர் மற்றும் நவீன வசதிகள் செய்யப்படவுள்ளது.
அதனால் தங்கும் அறையின் வாடகை மூன்று முதல் நான்கு மடங்கு வரை உயர்த்தபட்டடுள்ளது.இதனை தொடர்ந்து பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.இவ்வாறு வாடகை உயர்த்தப்பட்டதற்கு தெலுங்கு தேசம்,பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்து குறிப்பிடத்தக்கது.மேலும் தெலுகு தேசம் கட்சி சார்பில் திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிர்வாக கட்டிடம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.உயர்த்தப்பட்ட அறையின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.