மாஞ்சா நூலுக்கு மேலும் 60 நாட்கள் தடை!!! அதிரடியாக அறிவித்த போலிஸ் கமிஷனர்!!!

0
92

மாஞ்சா நூலுக்கு மேலும் 60 நாட்கள் தடை!!! அதிரடியாக அறிவித்த போலிஸ் கமிஷனர்!!!

மாஞ்சா நூல் கொண்டு பட்டம் விடுவதற்கு மேலும் 60 நாட்கள் தடை விதிக்கப்படுவதாக போலிஸ் கமிஷனர் அவர்கள் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பட்டம் பறக்க விட அனைவருக்கும் ஆசை இருக்கும். ஆனால் பட்டத்தை சாதாரண நூல் கொண்டு நகரத்திற்குள் விடுவது ஆபத்தான சொயல் ஆகும். அதிலும் மாஞ்சா நூல் கொண்டு நகரத்திற்குள் பட்டத்தை பறக்கவிடுவது தற்பொழுது தண்டனைக்குரிய செயலாக மாறியுள்ளது.

சென்னையில் பல பகுதிகளில் மாஞ்சா நூலை வைத்து பட்டம் பறக்கவிடப்படுகின்றது. இதனால் சாலையில் செல்லும் பலருக்கும் விபத்துக்கள் ஏற்படுகின்றது. பலருக்கும் காயங்கள் ஏற்படுகின்றது. மேலும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றது. இதனால் மாஞ்சா நூல் கொண்டு பட்டம் பறக்க விடுவதற்கும், விற்பனை செய்வதற்கும், மாஞ்சா நூலை தயாரிப்பதற்கும், சேமித்து வைப்பதற்கும் போலிஸ் கமிஷனர் தடை விதித்துள்ளார்.

அந்த தடையை மீறி மாஞ்சா நூலை தயாரிப்பவர்கள் மீதும், விற்பனை செய்பவர்கள் மீதும் வழக்குகள் பதியப்பட்டு கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் பல பாதிப்புகளை ஏற்படுத்தும் இந்த மாஞ்சா நூலை பயன்படுத்துவதற்கு ஏற்கனவே தடை இருந்து வருகின்றது.

இந்த நிலையில் மாஞ்சா நூலை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் மேலும் 60 நாட்களுக்கு தடை விதித்து போலிஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து நேற்று முதல் அதாவது செப்டம்பர் 2ம் தேதி முதல் அக்டோபர் மாதம் 31ம் தேதி வரை 60 நாட்களுக்கு மாஞ்சா நூலை பயன்படுத்துவதற்கும், தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தடையை மீறுபவர்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்படும் என்றும் போலிஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் அவர்கள் எச்சரிகை விடுத்துள்ளார்.