Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் திருப்பம்! மேலும் ஒரு குற்றவாளியா?

Another accused arrest in Pollachi case

Another accused arrest in Pollachi case

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் திருப்பம்! மேலும் ஒரு குற்றவாளியா?

2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாட்டில் பொள்ளாச்சியில் பெரும் பரபப்பான சம்வம் ஒன்று நடந்தது.இதில் இளம்பெண்கள் பலரை ஒரு கும்பல் பாலியல் துன்புறுத்தல் செய்து அதனை செல்போனில் வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டுவதாக புகார் எழுந்தது.இந்த புகாரை விசாரித்த காவல்துறை பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தது.

இந்த வழக்கில் சபரிராஜன், சதீஷ்குமார், திருநாவுக்கரசு, வசந்தகுமார் ஆகிய நான்கு இளைஞர்கள் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. இதற்கு அடுத்த நாள் சபரிராஜன்,சதீஷ்,வசந்தகுமார் ஆகிய மூவரும் கைதுசெய்யப்பட்டனர்.திருநாவுக்கரசு தேடப்பட்டு வந்தார்.

இந்த வழக்கில் பிப்ரவரி 24ஆம் தேதியன்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.அதற்கு அடுத்த நாள் புகார் கொடுத்த பெண்ணின் சகோதரரை திருநாவுக்கரசு மற்றும் சபரிராஜனின் நண்பர்கள் தாக்கினர்.அதே நாளில் திருநாவுக்கரசு தவிர்த்த மூன்று பேர் அன்றைய தினம் கைதுசெய்யப்பட்டனர்.

மேலும் சிபிசிஐடிக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.சிபிசிஐடி ஹீரோன்பௌள் மற்றும் பைக் பாபு என இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.மேலும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் அ.தி.மு.க. மாணவர் அணி செயலாளர் அருளானந்தம் என்பவரை கைது செய்து சிபிசிஐடி விசாரித்து வருகின்றனர்.இதுவரை எட்டு பேரை கைது செய்து விசாரணை செய்து வருகிறது சிபிசிஐடி போலீஸ்.

ஏற்கனவே முக்கிய குற்றவாளியாக அறியப்பட்ட சதிஷ்குமார் என்பவரின் நண்பரான அருண்குமார் என்பவரை தற்போது கைது செய்துள்ளது சிபிசிஐடி போலீஸ்.பொள்ளாச்சியில் வைத்து கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த வழக்கின் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.குற்றம் புரிந்தவர்கள் எத்தனை பேர் என்று இன்னும் தெளிவாக தெரியவில்லை.அருண்குமாரின் கைது இந்த வழக்கில் மேலும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version