Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சுஷாந்த் சிங் மரணத்தை தொடர்ந்து மற்றுமொரு நடிகர் தற்கொலை?

சுஷாந்த் சிங் மரணத்தை தொடர்ந்து மற்றும் ஒரு நடிகர் தற்கொலை

கடந்த ஜூன் 14-ம் தேதி தான் பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டார்.இன்று வரையில் அவரது மரணம் தொடர்பாக பல்வேறு தரப்பினர் மீது குற்றம் சாட்டப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.

சில தினங்களுக்கு முன்பு சுஷாந்தின் முன்னாள் காதலி ரியா சக்ரபூர்த்தி தான் சுஷாந்த்-யை மன அழுத்ததிற்கு ஆளாக்கினார் என்று சுஷாந்தின் தந்தை ரியா மீது காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார்.

சுஷாந்த்-யின் மரணத்திலிருந்தே வெளிவராத ரசிகர்களுக்கு மற்றொரு முன்னணி நடிகர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

மராத்தியின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஷிடோஷ் பக்ரே (வயது 32) அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவர் சில தினங்களுக்கு முன்பு தனது சமூக வலைதளப்பக்கத்தில் தற்கொலை செய்துகொள்வதற்கான காரணங்களைப் பற்றிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஷிடோஷ் பக்ரே தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் இவர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

Exit mobile version