மீண்டும் கைது செய்யப்படும் கிஷோர் கே சாமி! மேலும் ஒரு வழக்கு பாய்ந்தது!

0
129

அரசியல் விமர்சகரான கிஷோர் கே சாமி அவர்கள் மீது சமீபத்தில் முன்னாள் முதல்வர்கள் சி என் அண்ணாதுரை, கருணாநிதி, தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோரை அவதூறாக பேசியதாக தெரிவித்து அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. 15 நாள் நீதிமன்ற காவலில் வைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.


கிஷோர் கே சாமி என்பவர் ஒரு அரசியல் விமர்சகர் அவர் பல அரசியல்வாதிகளையும் விமர்சனம் செய்திருக்கிறார். அரசியல்வாதிகள் செய்யும் தவறுகளை சமூக வலைதளங்களில் தைரியமாக சுட்டிக்காட்டியிருக்கின்றார். இதன் காரணமாக, பல அரசியல் கட்சி தலைவர்களும் அவர் மீது ஒரு பயத்துடனே இருந்து வருகிறார்கள்.

அதோடு அவர் அரசியல் கட்சி தலைவர்கள் மட்டுமல்லாது சமூகத்தில் இருக்கும் பலரையும் தவறு செய்தால் தைரியமாக சுட்டிக்காட்டி விமர்சனம் செய்து வந்தார். இதனால் அவர் மீது பலரும் கடும் கோபத்தில் இருந்து வந்தார்கள்.இவர்களைப் போன்ற அரசியல் விமர்சகர்கள் தமிழகத்தில் இருப்பதால்தான் அரசியல் கட்சித் தலைவர்கள் அநேக தவறுகள் செய்தாலும் ஒரு சில சமயங்களில் இவர்களை போன்றவர்களுக்கு பயந்து எந்த ஒரு செயலையும் செய்வதற்கு யோசிக்கிறார்கள்.

ஆனால் தற்போது இவர் மீது முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை, கருணாநிதி, தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் தொடர்பாக சமூக வலைதளங்களில் இழிவுபடுத்தும் விதமாக கருத்துக்களை தெரிவித்தார் என்று கூறி வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.திமுக எதிர்க்கட்சியாக இருந்த சமயத்தில் அப்போதைய முதலமைச்சரையும் நாட்டின் பிரதமரையும் கூட விமர்சிக்காமல் இருந்ததில்லை. இன்னும் சொல்லப்போனால் மிகக் கேவலமாக விமர்சனம் செய்திருப்பார்கள். அப்பொழுதெல்லாம் இந்த அவதூறு பேச்சுக்கள் எங்கே சென்றது என்று கேள்வியை எழுப்பி வருகிறார்கள் சமூக வலைதள வாசிகள்.

வழக்கு தொடர வேண்டும் என்றால் முதலில் திமுகவினர் மீது தான் வழக்கு தொடர வேண்டும் என்றும் ஏனென்றால் என்னதான் அவர்களுக்கு எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஒரு நாட்டுடைய பிரதமரை மரியாதை இல்லாமல் விமர்சனம் செய்வதற்கு ஒரு வரைமுறை இருக்கிறது. அந்த வரை முறையையும் மீறி விமர்சனம் செய்தவர்கள் திமுகவைச் சேர்ந்தவர்கள் என்றும் சமூக வலைதள வாசிகள் தெரிவித்து வருகிறார்கள்.திமுக எதிர்க்கட்சியாக இருந்த சமயத்தில் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டால் தமிழகத்தில் கருத்துரிமை இல்லை என்று கொந்தளிக்கும் திமுக உடன்பிறப்புகள் தற்போது எங்கு சென்றனர் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இதற்கிடையில் ஏற்கனவே சிறையில் இருக்கின்ற சமூக ஆர்வலரும் அரசியல் விமர்சகருமான கிஷோர் கே சாமியை மேலும் கைது செய்து 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து இருக்கிறார்கள். அதற்க்கு காரணமாக தெரிவிக்கப்பட்டது கிஷோர் கே சாமி கடந்த வருடம் ஜூலை மாதம் ஒரு பெண் பத்திரிக்கையாளரை இழிவுபடுத்தும் விதத்தில் சமூகவலைதளத்தில் பதிவிட்டதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது என்று தெரிவிக்கிறார்கள்.