Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது மேலும் ஒரு வழக்கு!! நாளை தீர்ப்பு!!

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது மேலும் ஒரு வழக்கு!! நாளை தீர்ப்பு!!

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பதாக தற்போது தகவல் வெளிவந்துள்ளது.

அதிமுக ஆட்சியில் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த பொழுது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக ரூ 1.50 கோடி மோசடி செய்ததாக ஏற்கனவே அவர் மீது வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த சூழ்நிலையில் ரூ.1.50 கோடி மோசடி தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த சூழ்நிலையில் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

அதன்படி அமைச்சர் செந்தில் பாலாஜி மீது ஊழல் தடுப்பு சட்டத்தில் சென்னை மத்திய குற்ற பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பதாக தற்போது தகவல் வந்துள்ளது.

ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு, கைது நடவடிக்கையின் போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவருக்கு இதயத்தில் மூன்று இடங்களில் ரத்த குழாய்களில் அடைப்பு இருப்பதாக சொல்லப்பட்டது. பின்னர் அவர் காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு இதை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது மேலும் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version