Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மீண்டுமொரு ஹத்ராஸ் சம்பவம்:! 9 மற்றும் 12 வயது சிறுவர்கள் 4 வயது சிறுமியை நாசம் செய்த அவலம்!

மீண்டுமொரு ஹத்ராஸ் சம்பவம்:! 9 மற்றும் 12 வயது சிறுவர்கள் 4 வயது சிறுமியை நாசம் செய்த அவலம்!

உத்திரபிரதேசம் மாநிலம் ஹத்ராஸில் கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி தலித் சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு,இடுப்பெலும்பு உடைக்கப்பட்டு நாக்கு அறுபட்டு 14 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு கொடூரமாக உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதையும் உலுக்கியது.

இந்த சம்பவத்திலிருந்து மீண்டு வராத நமக்கு மீண்டும் ஒரு பாலியல் வன்கொடுமை ஹத்ராஸ் பகுதியில் நடந்துள்ளது.

ஹத்ராஸ் பகுதியில் 4 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.அதே பகுதியைச் சேர்ந்த 9 மற்றும் 12 வயதுடைய இரண்டு சிறுவர்கள் அந்த 4 வயது சிறுமியை தனியாக அழைத்து சென்றுள்ளனர்.

பின்னர் அந்த சிறுமியை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று அந்த இரண்டு சிறுவர்களும் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியதாக,இரண்டு சிறுவர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலும் பாதிக்கப்பட்ட 4 வயது சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கைதான 2 சிறுவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் காவல்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version