மாவட்ட மக்களுக்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை!! சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!

0
72

மாவட்ட மக்களுக்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை!! சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பா.செந்தாமரைக்கண்ணன் தமிழகத்தில் இரண்டு மாவட்டங்களில்  கனமழை நீடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த மழைக்கு காரணம் கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை எதிரொலியே தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.  மேலும்  ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதனையடுத்து மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

இந்த நிலையில் சென்னை வானிலை மையம் அறிவிப்பின் படி  கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தீவர அடைந்தது கனமழை பெய்து வருவதால் தமிழகத்திலும் மலைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.

இதனால் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்றும்  நாளையும்  கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதனை தொடர்ந்து சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கும் கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மற்ற மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடம் என்றும்  வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் 48 மணி நேரம் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்  என்றும் ஒரு சில இடத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.