Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

செல்லப்பிராணியாகிய நாய் செய்த வேற லெவல் நிகழ்ச்சி

another-level-show-made-by-pet-dog

another-level-show-made-by-pet-dog

வீட்டின் உள் செல்ல முயன்ற நல்ல பாம்பை வளர்ப்பு நாய் ஒன்று குறைத்து விரட்டிய வீடியோ வெளியாகியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள சின்னக்கங்கனாகுப்பம் இடத்தை சேர்ந்தவர் பிரியா. இவர் தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வந்த நிலையில், இன்று காலையில் வெளியே சென்றுவிட்டார் பிரியா.

வீட்டிற்குள் இருந்த நாய் வெகு நேரமாக குறைத்து கொண்டிருந்த நிலையில், அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது சுவரின் பகுதியில் நல்ல பாம்பு ஒன்று படமெடுத்து இருந்தது தெரியவந்தது.

பாம்பை கண்ட நாய் குரைத்துக் கொண்டே இருந்ததை அடுத்து, பொதுமக்கள் பாம்பு பிடிப்பவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். நாய் பாம்பை விட்டு விலகி வராமல் அங்கு நின்று வெகு நேரமாக குரைத்து கொண்டிருந்தது.

ஒரு கட்டத்தில் அமைதியையிழந்த பாம்போ நாயைத் தாக்க முயற்சித்தது. இந்த தாக்குதலிலிருந்து சாமர்த்தியமாக தப்பித்த நாய், தொடர்ந்து அதனை எதிர்த்துக் கொண்டே இருந்தது.

பூனை அரை மணி நேரமாக நடைபெற்ற இந்த போராட்டத்தில், பாம்பை அங்கிருந்து நகர விடாமல் நாய் பார்த்துக்கொண்டது. இதையடுத்து பாம்பை பிடிக்கும் செல்வா என்ற நபர் சம்பவ இடத்திற்கு விரைந்து பாம்பை பிடித்து காட்டுப்பகுதியில் விட்டு விட்டார்.

Exit mobile version