தமிழக அரசின் மற்றொரு புதிய திட்டம் அமலுக்கு வருகிறது!!
கடலோரப் பகுதியில் ஏற்படும் சீற்றங்களான, சூறாவளி மற்றும் புயல் போன்ற இயற்கை சீற்றங்களில் அதிகம் பாதிக்கப்படுவது மீனவர்களே.
இந்த இயற்கை சீற்றங்களால் உயிரிழந்த, அல்லது காணமல் போன மீனவ குடும்பங்களுக்கு தமிழக அரசானது ரூபாய் ஒரு கோடி “சுழல் நிதி” திட்டத்தின் மூலம் வழங்கவிருக்கிறது.
அந்த வகையில் 2016 ஆம் ஆண்டு முதல் 2 0 2 1 ஆம் ஆண்டு வரை காணாமல் போன மீனவர்களின், குடும்பத்தினருக்கு 2 லட்சம் ரூபாய் இப்போது இழப்பிடாக வழங்கப்படும் என்று கூறினார் ,மேலும் இந்த சுழல் திட்ட நிதி உத்தரவை தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை மற்றும் மீன்வளத்துறையினர் இணைந்து உருவாக்கியுள்ளனர்.
இந்த சுழல் நிதி திட்டமானது மீனவ மக்களை கருத்தில் கொண்டு எடுக்கபட்ட ஒரு முடிவு என்பதை, கால்நடை பராமரிப்பு துறையினர் மற்றும் மீன்வளத்துறையினர் கூறியுள்ளனர். இந்த திட்டமானது விரைவில் அமலுக்கு வரவிருக்கிறது என்றும் கூறியுள்ளனர்.