நடிகர் சிவாஜி கணேசனின் இறப்பானது தமிழகத்தை மிகவும் உலுக்கிய சம்பவமாகவே இருந்தது. அவருடைய இறுதி சடங்கை விஜயகாந்த் அவர்கள் முன் நின்று நடத்தினார் என்பது ரசிகர்கள் மற்றும் இன்றி பொதுமக்கள் அனைவரும் அறிந்ததே. அப்படி நடிகர் சிவாஜி கணேசனின் இறுதி சடங்கில் நாம் அறியாத சில விஷயங்களை இந்த செய்தி தொகுப்பில் காண்போம்.
நடிகர் சிவாஜி கணேசன் அவர்கள் இறைவனடி சேர்ந்த பொழுது அவரின் மூத்த மகனான பிரபு அமெரிக்காவில் படப்பிடிப்பு தளத்தில் இருக்கவே நடிகர் விஜயகாந்த் மற்றும் சிவாஜி கணேசனின் இரண்டாவது மகனான ராம்குமார் மட்டுமே சம்பவ இடத்தில் இருந்திருக்கின்றனர்.
ஒருபுறம் ராம்குமார் மணமடைந்து அழுது கொண்டிருக்க மற்றொருபுறம் சிவாஜி கணேசனின் மனைவியார் கமலா அம்மா மனம் உடைந்து நொறுங்கிப் போய் இருந்திருக்கிறார். என்ன செய்வதென ராம்குமார் இடம் விஜயகாந்த் அவர்கள் கேட்டதற்கு, ” என்னமோ விஜி.. நீங்களே பார்த்து செய்யுங்கள்” என்று கூறி அழத் தொடங்கி இருக்கிறார்.
உடனே விஜயகாந்த் அவர்களும் அவர்களுடைய படையை கொண்டு நடிகர் சங்கத்தில் இறுதி மரியாதைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தனி ஒருவராய் செய்து முடித்திருக்கிறார். அடுத்த நாள் சிவாஜி கணேஷன் அவர்களின் இறுதி மரியாதை இன் பொழுது மகன்கள் அனைவரும் மரியாதை செலுத்த வாருங்கள் என்று கூற நடிகர் பிரபு அவர்கள் ஓரத்தில் நின்று கொண்டிருந்த விஜயகாந்த் அவர்களையும் அழைத்து சென்றிருக்கிறார். அப்பொழுது நான் மகன்களை மட்டும் தான் அழைத்தேன் என புரோகிதர் கூற, இவரும் சிவாஜி கணேசன் உடைய மகன்தான் என்று பிரபு கூறி அதன் பின் இறுதி சடங்குகள் நல்லபடியாக முடிந்திருக்கிறது.
இறுதி சடங்குகள் முடிந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு விஜயகாந்த் அவர்கள் பிரபு அவர்களின் வீட்டிற்கு சென்ற பொழுது, அங்கு பிரபவினுடைய தாயார் கமலா அம்மா அவர்கள், ” ஐயா அடிக்கடி உங்கள் எல்லோரையும் என்னுடைய பிள்ளை… என்னுடைய பிள்ளை என்று கூறிக்கொண்டே இருப்பார்” அது உண்மையாகி போகிவிட்டது என்று உடைந்து அழுது இருக்கிறார். உண்மையில் விஜயகாந்த், சிவாஜி கணேசனின் உடைய பெற்ற பிள்ளை என்றாலும் பெற்ற பிள்ளையினிடத்தில் நின்று அனைத்து காரியங்களையும் நடத்தி முடித்து அவருடைய பிள்ளை என்ற பெயரை பெற்று விளங்கி இருக்கிறார்.