அரசின் கவனக்குறைவால் மேலும் ஓர் பலி! மழைநீர் வடிகாளால் அடுத்தடுத்த விபரீதம்!
தமிழகத்தில் கடந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவமழையின் போது, அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக கடலோர மாவட்டமான சென்னை உள்பட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. மேலும் நீர்நிலைகள் நிரம்பி மழை நீர் வீதிகளுக்குள் புகுந்தது. அதேபோல் சாலைகளில் நீர் தேங்கி வெள்ளம் ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் மழை காரணமாக எங்கு பார்த்தாலும் சேறும் சகதியுமாக காணப்பட்டது.அங்காங்கே பள்ளத்தில் மழை நீர் தேங்கியும் உள்ளது. இதனால் இம்மாவட்டத்தில் உள்ள மாக்காடு நகராட்சியில் மழைநீர் வடிகால் பணி நடைபெற்று வந்துள்ளது. மேலும் இப்பணி முழுமையாக முற்றுப் பெறவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், அவ்வழியாக சென்ற ஒருவர் மழை நீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்து பலியாகி உள்ளார் என்ற தகவல் அங்கிருந்த மக்களால் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டனர்.
இவரைப் பற்றி போலீசார் விசாரணையில் தனியார் நிறுவன ஊழியர் லட்சுமிபதி என்றும் வயது 42 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உரிய பாதுகாப்பின்றி நடைபெற்று வரும் மழை நீர் வடிகால் பணிகளால் உயிர் பலி அதிகரித்துக் கொண்டே வருகிறது என்று தகவல் வெளியாகி உள்ளது.
பின், காஞ்சிபுரம் போலீசார் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.