தமிழகத்தில் இந்த ஆண்டு 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைப்பதற்கான அனுமதியை ஒன்றிய அரசிடம் கேட்டிருப்பதாகவும் ஆனால் ஒன்றிய அரசு தமிழகத்திற்கு அனுமதி அளிக்க மறுத்திருப்பதாகவும் சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருக்கிறார்.
தமிழக சட்டப்பேரவை கேள்வி நேரத்தில் அதிமுகவை சேர்ந்த வாணியம்பாடி செந்தில்குமார் பேசியிருப்பதாவது :-
திம்மாம் பேட்டை பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்திட வேண்டுமென கோரிக்கை வைத்திருக்கிறார்.
இதற்கு சுகாதார அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள், ஒன்றிய அரசினுடைய கூற்றுப்படி 30,000 மக்கள் தொகை இருக்கக்கூடிய இடங்களுக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் 2 ஆரம்ப சுகாதார மையம் அமைக்க வேண்டும் என்பதாகும். ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து மற்றொரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு குறைந்தபட்சம் 8 கிலோமீட்டர் தொலைவு இருத்தல் வேண்டும் என்றும் ஒன்றிய அரசு தெரிவித்து இருக்கிறது எனக் கூறியிருக்கிறார்.
மேலும், திம்மாம் பேட்டையில் உள்ள கிராமங்களில் எண்ணிக்கையானது 6,279 பேர் என்றும் இவர்களுக்கு ஏற்கனவே துணை ஆரம்ப சுகாதார மையம் செயல்பட்டு வருகிறது என்றும் சுட்டிக்காட்டிய மா சுபிரமணியன் அவர்கள் டெல்லியில் நடந்த சந்திப்பில் தமிழகத்திற்கு கூடுதலாக 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைப்பதற்கான அனுமதி கேட்கப்பட்டிருப்பதாகவும், ஆனால் வட மாநிலத்தை விட தமிழகத்தில் 3 மடங்கு அதிக அளவில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன என்றும் தமிழகம் இலக்கை எட்டிவிட்டது என்றும் குறிப்பிட்டு ஒன்றிய அரசு அனுமதியை மறுக்கிறது என சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார்.