போலீஸால் மறுபடியும் ஒரு பெண் மரணம்! என்ன நடந்தது?

0
123

போலீஸால் மறுபடியும் ஒரு பெண் மரணம்! என்ன நடந்தது?

செல்போனை திருடியதாக கூறி இளம்பெண்ணை கைது செய்து அடித்து துன்புறுத்தியதால் அவமானம் தாங்காமல் அந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்தவர் இவர். இவர் பெயர் நிஷா. இந்தப் பெண் கடந்த வெள்ளிக்கிழமையன்று செல்போன் கடைக்கு மாலை சென்றுள்ளார். திடீரென எதிர்பாராமல் வந்த போலீஸார் நிஷா செல்போனை திருடி உள்ளதாகவும் இது தொடர்பாக சிசிடிவி காட்சிகள் பதிவாகியுள்ளதாகவும் கூறி அவரை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்துள்ளனர்.

இரவு 10 மணி ஆகியும் மகள் வராததை கண்டு தாய் மிகவும் பதற்றம் அடைந்து உள்ளார்.இரவு 10 மணிக்கு மேல் வந்த நிஷா அழுது கொண்டே வந்துள்ளார். அவமானம் தாங்காமல் அந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதை குறித்து அந்தப் பெண்ணின் தாயார் கூறியதாவது, போலீசார் தன் மகளை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அடித்து துன்புறுத்தியதாக கூறுகிறார். எவ்வளவோ போராடியும், நாங்கள் அப்படிபட்டவர்கள் இல்லை என்று சொல்லியும்,விடுவிக்க மறுத்த போலீசார் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசிய பிறகே முடிவு செய்து வெளியே விட்டனர் எனவும்,

மேலும் தன் மகள் மீது எந்த தவறும் இல்லை, போலீசார் துன்புறுத்தல் காரணமாக மன அழுத்தம் ஏற்பட்டு விரக்தியில் தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனவும் கூறியுள்ளார்.

சம்பந்தப்பட்ட போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுத்து தண்டனை அளிக்கப்பட வேண்டும் என கூறியுள்ளார். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.