Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு! அமைச்சர் சொன்ன பதில்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அமைச்சர் சொன்ன பதில்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அமைச்சர் சொன்ன பதில்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அமைச்சர் சொன்ன பதில்!!

உலகம் முழுவதும் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த வருடமும் கொரோனா  பரவல் உள்ளது. இதன் காரணமாக தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. இது குறித்து மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் ஏனென்றால், இந்திய அளவில் பத்தாயிரத்திற்கும் அதிகமான பாதிப்புகள் இருந்தாலும் தமிழ்நாட்டில் ஐநூறுக்கும் மேல் இருந்த பாதிப்பு தற்போது குறைய தொடங்கியுள்ளது. பாதிப்பு குறைவாக இருந்தாலும் மக்கள் பொது இடங்களிலும், சுற்றுலா தளங்களிலும் முககவசம் அணிந்து செல்வது நல்லது.

மதுரையிலிருந்து சென்னை செல்வதற்காக விமான நிலையம் வந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் பரவும் கொரோனா பாதிப்புகளுக்கு இடையே சுற்றுலாத் தலங்களில் வழக்கமான விதிமுறைகளை கடைபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது பரவி வருவது வீரியமற்ற வைரஸாக இருப்பதால் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என தெரிவித்தார்.

 

Exit mobile version