திடீரென நடந்த அதிரடி ரெய்டு! பரபரப்பான வேளச்சேரி!

0
121

தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவராக இருப்பவர் வெங்கடாசலம் இவருடைய வீடு மற்றும் அலுவலகங்களில் இன்றைய தினம் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் அதிரடி சோதனையை தொடங்கியிருக்கிறார்கள்.

அதாவது திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததிலிருந்து அதிமுகவைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் அதிரடி சோதனைகளை ஏவிவிட்டு வேடிக்கை பார்க்கிறது திமுக. இந்த சோதனைகளின் பட்டியலில் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி ,தங்கமணி, வீரமணி என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

ஆனால் தற்சமயம் தற்போது தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவராக இருக்கக் கூடிய வெங்கடாசலம் அவர்களின் வீட்டில் இந்த சோதனை நடைபெற்று கொண்டிருக்கிறது என்பது யோசிக்க கூடிய விஷயமாக தான் இருக்கிறது.

இது தொடர்பாக வெளியான முதல்கட்ட தகவலின் அடிப்படையில் ஓய்வுபெற்ற வனத்துறை அதிகாரியான வெங்கடாசலம் சென்ற 2019ஆம் வருடம் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவராக நியமனம் செய்யப்பட்டார். தற்போது வரையில் அவரை அந்த பொறுப்பில் இருந்து வருகிறார்.

இவர் பணியில் இருந்த சமயத்தில் விதிமுறையை மீறி சொத்துகள் சேர்த்ததாக ஒரு தகவல் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது, அந்த தகவலின் அடிப்படையில் அவருடைய வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

அதோடு இந்த சோதனையில் பத்துக்கும் அதிகமான அதிகாரிகள் ஈடுபட்டு இருப்பதாக தெரிகிறது. தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அலுவலகத்தில் மதியம் 12 மணி முதல் இந்த அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக தெரிகிறது. அதேபோல வேளச்சேரியில் இருக்கக்கூடிய அவருடைய இல்லத்தில் கூட காலை முதல் சோதனை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.