10 நாட்களுக்கு அந்தியோதயா ரயில் சேவை ரத்து! தெற்கு ரயில்வே அறிவிப்பு!

0
223

10 நாட்களுக்கு அந்தியோதயா ரயில் சேவை ரத்து! தெற்கு ரயில்வே அறிவிப்பு!

தாம்பரம் முதல் நாகர்கோவில் வரை இயக்கப்பட்டு வரும் அந்தியோதயா ரயில் சேவை 10 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தற்பொழுது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் இருந்து நாள்தோறும் இந்தியா முழுவதும் உள்ள நகரங்களுக்கு இரயில் சேவை இயக்கப்பட்டு வருகின்றது. விரைவு ரயில், பயணிகள் ரயில், அதி விரைவு ரயில் என்று பலவிதமான இரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது.

இந்தியாவில் இரயிலில் மட்டும் அதிகமான மக்கள் பயணம் செய்கின்றனர். இதில் முன்பதிவு செய்து பயணிக்கும் வகையிலும் முன்பதிவு செய்யாமல் பயணம் செய்யும் வகையிலும் பயணம் செய்யும் வகையில் இரயில் சேவை இயக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அந்தியோதயா இரயில் சேவை பத்து நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தெற்கு இரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

முழுக்க முழுக்க முன்பதிவு செய்யப்படும் பெட்டிகளை மட்டுமே அந்தியோதயா இரயில் கொண்டுள்ளது. இந்த அந்தியோதயா இரயில் தாம்பரத்திலிருந்து நாகர்கோவில் வரை இயக்கப்படுகின்றது. தற்பொழுது இந்த இரயில் சேவை தான் பத்து நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தெற்கு இரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி தாம்பரத்திலிருந்து நாகர்கோவில் வரை செல்லும் அந்தியோதயா இரயில் ஜூலை 22 முதல் 31ம் தேதி வரையிலும் அதே போல நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் வரை செல்லும் அந்தியோதயா இரயில் ஜூலை 22ம் தேதி முதல் ஜூலை 31ம் தேதி வரையிலும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு இரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்தியோதயா இரயில் சிதம்பரம், நெல்லை, திருச்சி உள்பட 17 மாவட்டங்கள் வழியாக பயணம் செய்கின்றது.