அனுபம் கேரின் மனம் உடைந்த வலைதள பதிவு… காரணம் இதுதான்!!

0
76
Anupam Kher's heartbreaking blog post... This is the reason!!

லிட்டில் ஜான், விஐபி போன்ற பேமஸான படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர்தான் நடிகர் அனுபம் கேர். எம் எஸ் தோனி படத்தில் தோனியின் அப்பாவாகவும் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இவரின் பங்கு பாலிவுட்டிலும் உள்ளது. இவர் தற்சமயம் மெய்யழகன் படத்தைப் பற்றி வலைத்தளங்களில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

மெய்யழகன் படம் :
“ஜோதிகா சூர்யாவின் 2D என்டர்டைமண்ட்” மூலம் தயாரிக்கப்பட்ட படம் இது. உணர்ச்சிகளின் வலிகள் மிகுந்த “96” பட இயக்குனர் தான் ‘பிரேம்’. இவர்தான் இப்படத்தையும் இயக்கி உள்ளார். நடிகர் அரவிந்த்சாமி இப்படத்தில் ‘அருண் மொழி வருமனாகவும்’, கார்த்திக் ‘மெய்யழகன்’ ஆகவும், நடிகர் ‘ராஜ்கிரண்’ முக்கிய ரோல்லையும் நடித்து இருப்பார்கள். நடிகை ‘ஸ்ரீதிவ்யா’ அவர்கள் வெகு நாட்களுக்குப் பிறகு இப்படத்தில் நடித்துள்ளார்.

இப்படமானது சொந்தக் காரர்களின் சூழ்ச்சியால், ஊரை விட்டு சென்றப் பின் மீண்டும் சூழ்நிலை காரணமாக அவ்வூருக்கு திரும்ப வரும் இளைஞரை மையப்படுத்தி அமையும். “அனுபம் கேர்” இப்படத்தை பார்த்துவிட்டு பதிவிட்ட பதிதாவது, “நான் இப்படத்தைப் பார்த்து மிகவும் அழுது விட்டேன்”. என் நண்பர் ‘அரவிந்த்சாமி’ மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். நடிகர் ‘கார்த்திக்’ வெள்ளந்தி குணத்தை அற்புதமாக வெளிக்காட்டி இருப்பார். இப்படம் மிக எளிமையானது.
இப்படத்தின் ரிலீஸின் போது, நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்த ‘லப்பர் பந்து’ம், ஹிப் ஹாப் ஆதி இயக்கி நடித்த ‘இரண்டாம் உலகப்போர்’ என்ற படமும் வெளியாகி இருந்தது. அதனால் இப்படம் எதிர்பார்த்த வசூலை அடைய முடியவில்லை. எனினும் மக்கள் மத்தியில் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. 6 வருடத்திற்கு பிறகு இயக்குனர் பிரேம்குமார் மீண்டும் இப்படத்தில் உணர்ச்சிகளை அழகாக மையப்படுத்தி எடுத்திருப்பார்.

பல ஆண்டுகளுக்குப் பின் தன் சொந்த ஊருக்கு திரும்பும் அருண் மொழி வர்மன் தவிப்பையும், உறவுகளின் பாசத்தையும் மிக அழகாக காண்பித்துள்ளார். இதை பார்க்கும் ரசிகர்களுக்கு அவரவர் சொந்த ஊரை ஞாபகப்படுத்தும் வகையில் இப்படம் அமைந்துள்ளது என அவர் வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.