Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உடல்நலப் பிரச்சனையால் அவதிப்படும் அனுஷ்கா.. வாய்ப்புகளை மறுக்க இதுதான் காரணமா?

உடல்நலப் பிரச்சனையால் அவதிப்படும் அனுஷ்கா.. வாய்ப்புகளை மறுக்க இதுதான் காரணமா?

நடிகை அனுஷ்கா பாகுபலி படத்துக்குப் பிறகு தமிழில் வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை.

தமிழ் தெலுங்கு உட்பட பல படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அனுஷ்கா. இவர் நடித்த சில திரைப்படங்கள் மலையாளத்திலும், இந்தியிலும் மொழி மாற்றம் செய்து திரையிடப்பட்டுள்ளது.. பாகுபலி படத்திற்கு பிறகு சரியான பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார். விரைவில் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விடுவார் என்று செய்திகள் வெளியானபோதும், அதுகுறித்து அனுஷ்கா தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் நிசப்தம் என்ற படத்தில் கடைசியாக நடித்திருந்த அனுஷ்கா, அதையடுத்து ஒரு இளவட்ட தெலுங்கு ஹீரோ நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகின.

கடைசியாக அவர் இஞ்சி இடுப்பழகி படத்துக்காக உடல் எடையை அதிகமாக்கி நடித்தார். ஆனால் அதன் பின்னர் அவரால் உடல் எடையை குறைக்க முடியவில்லை. இதனால் தொடர்ந்து பல படங்களின் வாய்ப்புகளை மறுத்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க சம்மதித்து தேதிகள் ஒதுக்கினாராம்.

இதற்கான வேலைகள் தொடங்கிய ஏ எல் விஜய்க்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக கடைசி நேரத்தில் அனுஷ்கா நடிக்க முடியாது எனக் கூறிவிட்டாராம். இதற்கு அவரின் உடல்நலப் பிரச்சனையே காரணம் என சொல்லப்படுகிறது. அனுஷ்கா தைராய்டு பிரச்சனையால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது.

Exit mobile version