Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இன்னும் எத்தனை திருமணம் செய்வேனோ தெரியவில்லை! அனுஷ்கா புலம்பல்

பாகுபலி, பாகுபலி 2 ஆகிய திரைப்படங்கள் உள்பட பல வெற்றிப் படங்களில் நடித்தவர் அனுஷ்கா ஷெட்டி. பாகுபலி படத்தின் நாயகனான பிரபாசை காதலித்து வருகிறார் என்றும் அவரை திருமணம் செய்து கொள்வார் என்று கூறப்பட்டது. ஆனால் பிரபாஸ் இதனை உறுதியாக மறுத்தார்

இதன் பின்னர் ஒரு டாக்டருடன் அனுஷ்காவுக்கு காதல் என்றும், தொழில் அதிபர் ஒருவரை ரகசிய திருமணம் செய்து விட்டதாகவும் வதந்தி பரவியது. தற்போது புதிதாக அவர் ஒரு கிரிக்கெட் வீரரை காதலித்து வருவதாகவும் இவ்வருட இறுதியில் இருவருக்கும் திருமணம் நடக்கும் என்றும் ஒரு கிசுகிசு பரவி வருகிறது

இது குறித்து தெலுங்கு ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த நடிகை அனுஷ்கா ’இன்னும் எத்தனை முறைதான் எனக்கு திருமணம் செய்து வைப்பார்கள் என்று தெரியவில்லை. பத்திரிகையாளர்களும் கிசுகிசுக்கள் எழுதுபவர்களும் எனக்கு பல முறை ஏற்கனவே திருமணம் செய்து வைத்து விட்டார்கள். இதை எல்லாம் கட்டுகதை, வதந்தி என்று தெரிந்தும் ரசிகர்கள் அதை படித்து மகிழ்ந்து வருகிறார்கள்

எனக்கு திருமணம் என்றால் அது பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையுடன் தான். என்னுடைய வாழ்வில் காதல் திருமணம் என்ற ஒன்று கிடையாது. எனது திருமணம் குறித்து வெளிவந்து கொண்டிருக்கும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். திருமணம் செய்யும் போது நானே முறைப்படி அறிவித்து அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன் என்று அனுஷ்கா ஷெட்டி கூறியுள்ளார்

Exit mobile version