Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எப்பேர்ப்பட்ட தலைவலியும் நொடியில் பறந்துபோகும்!! இதோ உங்களுக்கான பாட்டி வைத்தியம்!!

Any headache will fly away in an instant!! Here's a granny remedy for you!!

Any headache will fly away in an instant!! Here's a granny remedy for you!!

இந்த தலைவலி பாதிப்பு அனைவரும் சந்திக்க கூடிய ஒன்றாகும்.இதை சரி செய்ய கீழ்கண்ட பாட்டி வைத்தியம் கைகொடுக்கும்.

தீர்வு 01:-

தேவைப்படும் பொருட்கள்..

1)ஒரு இஞ்சி துண்டு
2)பாதி எலுமிச்சம் பழம்
3)ஒரு தேக்கரண்டி தேன்

செய்முறை..

முதலில் ஒரு துண்டு இஞ்சி எடுத்து தோலை சீவிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள்.

பிறகு ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி பாதி அளவு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.அதன் பிறகு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்துங்கள்.

பிறகு நறுக்கி வைத்துள்ள இஞ்சி துண்டுகளை போட்டு குறைவான தீயில் கொதிக்க வையுங்கள்.நன்றாக கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு இஞ்சி பானத்தை கிளாஸிற்கு வடிகட்டி கொள்ளுங்கள்.

பிறகு நறுக்கி வைத்துள்ள ஏரலுமிச்சையில் இருந்து சாறு எடுத்து இஞ்சி பானத்தில் கலந்து விடுங்கள்.அதற்கு அடுத்து ஒரு தேக்கரண்டி தூயத் தேன் சேர்த்து குடித்தால் தலைவலி நீங்கும்.

தீர்வு 02:-

தேவையான பொருட்கள்..

1)பத்து மில்லி தேங்காய் எண்ணெய்
2)பத்து மில்லி கிராம்பு எண்ணெய்

செய்முறை..

சுத்தமான கிண்ணம் ஒன்றை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு அதில் பத்து மில்லி தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக பத்து மில்லி கிராம்பு எண்ணெய் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.இந்த எண்ணெயை நெற்றியில் அப்ளை செய்துவிட்டு ஒரு மணி நேரத்திற்கு உடலுக்கு ரெஸ்ட் கொடுக்க வேண்டும்.இப்படி செய்தால் எப்பேர்ப்பட்ட தலைவலியும் உடனடியாக நீங்கிவிடும்.

தீர்வு 03:-

தேவையான பொருட்கள்..

1)ஒரு கப் வெந்நீர்
2)ஒரு காட்டன் துணி

செய்முறை..

ஒரு பாத்திரத்தில் 1/4 லிட்டர் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தி எடுத்துக் கொள்ளுங்கள்.பிறகு ஒரு வெள்ளை காட்டன் துணியை அதில் நினைத்து நெற்றியில் ஒத்தடம் கொடுங்கள்.இப்படி செய்தால் தலைவலி குறையும்.

Exit mobile version