Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திமுக அமைச்சரின் மருமகள் சர்ச்சை பேச்சு! நடவடிக்கை எடுப்பாரா முதலமைச்சர்?

பாரதமாதா மற்றும் பூமி தாயை இழிவுபடுத்தும் மத மோதல்களை ஏற்படுத்தும் விதமாகவும், உரையாற்றிய ஜார்ஜ் பொன்னையா கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவர் தெரிவித்ததாவது, நாங்கள் போட்ட பிச்சையில் காரணமாகத்தான் திராவிடர் கழகம் வெற்றி பெற்று இருக்கிறது என்றும் தெரிவித்திருந்தார். இருந்தாலும் அவருக்கு ஆதரவு வழங்கும்படி கேட்டிருக்கிறார் திமுகவின் அமைச்சரின் மருமகள்.

திண்டுக்கல்லில் நடைபெற்ற மறைந்த ஸ்டெயின் சாமி இரங்கல் கூட்டத்தில் அமைச்சர் ஐ பெரியசாமியின் மருமகளும் திராவிட முன்னேற்ற கழகத்தின் சட்ட சபை உறுப்பினருமான செந்தில்குமாரின் மனைவியான மெர்சி தெரிவித்ததாவது, உலகம் முழுவதிலும் இருக்கின்ற பாதிரியார்களை கதாநாயகர்களாக தான் பார்க்கவேண்டும். அவர்களால்தான் கல்வியும், பகுத்தறிவும், கிடைத்திருக்கிறது இனிமேல் எவனாஇருந்தாலும் பாதிரியாரையும் சிஸ்டர் கைது செய்ய வேண்டும் என்றால் வாடிகனில் இருக்கின்ற போப்பிடம் அனுமதி வாங்கி விட்டு வந்துதான் கைது செய்ய வேண்டும் என்ற ஒரு சட்டம் ஏற்பட வேண்டும் என்று உரையாற்றி இருக்கிறார். அவருடைய பேச்சுக்கு கூட்டத்தினர் கைதட்டி ஆர்ப்பரித்து இருக்கிறார்கள்.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை கிறிஸ்துவ இயக்கம் மற்றும் ஜனநாயக கிறிஸ்துவ பேரவை முஸ்லிம் அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஜார்ஜ் பொன்னையாரின் பேச்சு சமூக வலைதளங்களில் வைரல் ஆகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

முளகுமூடு மறைமாவட்ட சர்ச்சில் பங்கு தந்தையாக இருக்கும் அவர் உரையாற்றிய போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு எத்தனை கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தாலும், கும்பாபிஷேகம் செய்தாலும், இந்துக்கள் ஒருவர்கூட ஓட்டுப்போட மாட்டார்கள். திமுக வெற்றி பெற்றதற்கு காரணம் கிறிஸ்தவ மக்களும், முஸ்லிம் மக்களும், போட்ட பிச்சைதான் இதனை மறந்து விடாதீர்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

கன்னியாகுமரியைச் சேர்ந்த திமுகவின் மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் இடம் கிறிஸ்தவர்களின் வீடுகளுக்குச் சென்று சந்தித்து நாங்கள் ஓட்டு கேட்கின்றோம் என்று தெரிவித்தேன். ஆனால் அவரோ வேண்டாம் பாதர் அப்படி செய்ய வேண்டாம் அப்படி செய்தால் ஒருவேளை இந்துக்களின் ஓட்டை நாம் பெறாமல் போய் விடுவோம். அப்படி ஒரு நிலை வந்தால் என்ன செய்வது என்று தெரிவித்தார். இருந்தாலும் நடந்தது என்ன இதன்காரணமாக, பாஜக வேட்பாளர் எம் ஆர் காந்தி நாகர்கோவிலில் வெற்றி பெற்றுவிட்டார். என பேசிய அவர் பூமாதேவியும் விட்டு வைக்கவில்லை என்று தெரிவிக்கிறார்கள்.

அதாவது பூமாதேவியை செருப்பு போட்டு மிதிக்க மாட்டானாம் பாரதமாதா மீது செருப்பு படவிடக் கூடாது. ஆனால் நாம் சூ தான் போட்டுக்கொண்டு நடக்கிறோம். இது எதற்காக பாரதமாதாவிடம் இருக்கும் அசிங்கம் நம்மிடம் தொற்றிக் கொள்ள இயலாது என்ற காரணத்திற்காக தான். நமக்கு சொரிசிரங்கு வந்து விடக்கூடாது என்றுதான். தமிழக அரசு இலவச செருப்பு கொடுத்தது என்று தெரிவித்திருக்கிறார். இந்த பூமாதேவி மிகவும் ஆபத்தான ஒருவர் இதனால் செருப்பு போட்டு கொண்டு நடக்க பழகிக் கொள்ளுங்கள் என்றுதான் தமிழக அரசு இலவச செருப்பு கொடுத்திருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

அத்துடன் விட்டுவிடாமல் இஸ்லாமியர்கள் அழகாக சொன்னார்கள் முடியை எங்களுடைய வார்த்தையில் சொன்னால் எங்கள் மயிரை கூட புடுங்க இயலாது பைபிளிலேயே இருக்கு என்று தெரிவித்தார்.இந்து மதத்தை அசிங்கப்படுத்தும் விதமாகவும், பாரதமாதாவை அசிங்கப் படுத்தும் விதமாகவும், அதோடு மத மோதலை ஏற்படுத்தும் விதமாகவும், பேசியதாக அவர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து தலைமறைவாக இருந்த அவர் கைது செய்யப்பட்டார். இந்த சூழ்நிலையில், அமைச்சரின் மருமகள் இவ்வாறு பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

இதன் மூலமாக மதக்கலவரங்கள் தமிழகத்தில் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை பெரிய அளவிலான மதக்கலவரங்கள் ஏற்படுமானால் அது நிச்சயமாகப் தமிழகத்தை பெரிய அளவில் பாதிக்கும் இதையெல்லாம் பார்த்துக்கொண்டு திமுக அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது என்று பலரும் கேள்வி எழுப்ப தொடங்கி இருக்கிறார்கள்.

Exit mobile version