முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் சிகிச்சை பெற்ற போது, அதிமுக அரசு கூறியதாலேயே சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டது என அப்போலோ மருத்துவமனையின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தில் ஆஜராக விலக்கு கோரி அப்போலோ மருத்துவமனை தரப்பில் உச்ச நீதிமன்றத்திலஉ் வழக்குத் தொடரப்பட்டது.
இந்நிலையில் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு எதிராக மூன்று விஷயங்களை அப்போலோ நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் முன்வைத்தது. அதில் ஆறுமுகசாமி ஆணையம் ஒருதலைபட்சமாக நடந்துகொள்கிறது. இந்த விவகாரத்தில் அரசியல் தலைவர் ஏராளமானோர் இன்னும் விசாரிக்கப்படாமல் இருக்கும் சூழ்நிலையில், எங்களது மருத்துவர்களை மட்டுமே, தொடர்ந்து விசாரணைக்கு அழைக்கின்றார்கள்.
நாங்கள் கொடுக்கும் தகவல்களை, ஆறுமுகசாமி ஆணையம் கசியவிடுகிறது. இதனால் எங்கள் நற்பெயர் கெட்டுப்போகிறது. இதனால், இதை தடுக்கும் பட்சத்தில் நீதிமன்றத்தை நாடக்கூடிய உரிமை எங்களுக்கு இருக்கிறது.
அந்த உரிமையின் அடிப்படையில் தான் ஆறுமுகசாமி ஆணையம் முன்பாக ஆஜராக முடியாது என்று தெரிவித்தோம். நாங்கள் ஆணையத்தை கலைக்கும்படி கூறவில்லை. ஆனால், ஆணையத்தில் மருத்துவ வல்லுநர்கள் யாரும் இடம்பெறவில்லை. அப்படி இருக்கையில் மருத்துவ ரீதியிலான விஷயங்ளை நாங்கள் எந்த அடிப்படையில் தெரிவிப்பது. நீதிமன்றத்தில் என்ன விஷயங்கள் வேண்டுமானாலும் சமர்பிக்கிறோம். ஆறுமுகசாமி ஆணையத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. மேலும் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அப்போதைய அரசு கூறிய காரணத்தாலேயே சிசிடிவி கேமராக்கள் அகற்றம் செய்யப்பட்டது. ஜெயலலிதாவுக்கு பிரைவேசி தேவைப்படுவதாக கூறியதாலைநே சிசிடிவி கேமராக்கள் அகற்றபட்டன என்று அப்பலோ நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது