விசாரணை முடிவதற்கு முன்னரே ஒருதலை பட்ச மென்று எவ்வாறு கூறலாம்? அப்பல்லோ நிர்வாகத்திற்கு சாட்டையடி கொடுத்த உச்ச நீதிமன்றம்!

0
119

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரிழப்பில் மர்மம் இருப்பதாக தெரிவித்து கடந்த 2017 ஆம் ஆண்டு அவருடைய நினைவிடத்தில் தியானத்தில் ஈடுபட்டார் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அதனைத் தொடர்ந்து பல சலசலப்புகள் அதிமுகவில் எழுந்தன.

அதன்பின்னர் சசிகலா முதல்வராக பொறுப்பேற்க இருந்தா,ர் அந்த சமயத்தில்தான் அவர் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்குச் செல்ல நேர்ந்தது, ஆகவே எடப்பாடி பழனிச்சாமி அவர்களை முதலமைச்சராக தேர்ந்தெடுத்துவிட்டு அவர் சிறைக்கு சென்று விட்டார், அதன்பின்னர் அதிமுகவில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தன.

ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்டோர் ஒன்றிணைந்தது கட்சியை உறுதிப்படுத்தினார்கள் அதோடு ஓபிஎஸ் அவர்களின் கோரிக்கையின் அடிப்படையில் ஜெயலலிதாவின் மரணம் பற்றி விசாரணை செய்ய அப்போதைய அதிமுக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்தது, இந்த ஆணையம் இதுவரையில் பலரிடம் விசாரணை செய்து வருகிறது.

இந்த விசாரணை ஆணையத்தின் முன்பு ஆஜராவதிலிருந்து விலக்கு கேட்டு ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்போலோ மருத்துவமனை தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்த சமயத்தில் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சமயத்தில் அதிமுக அரசு தெரிவித்ததன் அடிப்படையில் தான் சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டன என்று தெரிவித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் பரபரப்பை ஏற்படுத்தியது. அத்துடன் ஜெயலலிதா மருத்துவமனைக்கு அழைத்து வரும்போது மயக்க நிலையில் மட்டுமல்லாமல் காயங்களுடன் இருந்தார் என்றும், தெரிவித்திருந்தது அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம்.

இந்த சூழ்நிலையில், இந்த வழக்கு இரண்டாவது நாளாக நேற்றைய தினம் நீதிபதி அப்துல் நசீர் மற்றும் நீதிபதி கிருஷ்ணமுராரி உள்ளிட்டோர் அமர்வு முன்பு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. அந்த சமயத்தில் தமிழக அரசு சார்பாக மூத்த வழக்கறிஞர் அரிஸ்டாட்டில் ஆஜராகி வாதாடினார்.

அவர் தன்னுடைய வாதத்தின் போது ஆறுமுகசாமி ஆணையம் விசாரணையை முடித்த பின்பு முதலில் அறிக்கையை சமர்ப்பிக்கும், அதுவும் சட்டசபையில் சமர்ப்பிக்கப்பட்டு முழுமையாக அரசால் ஆய்வுக்கு உட்படுத்தப்படும், அதன் பின்னர்தான் பொதுவெளியில் வெளியிடப்படும், இருந்தாலும் அதற்கு முன்னதாகவே ஆறுமுகசாமி ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்ற அப்பல்லோ மருத்துவமனையின் குற்றச்சாட்டை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்? இது போன்ற வாதங்களை தற்சமயம் நீதிமன்றத்தில் செய்வதே வழக்கை திசை திருப்பும் முயற்சியாகும் என தெரிவித்தார்.

முதலில் விசாரணை ஆணையத்தில் மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும் என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டது. தற்சமயம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்று சொல்லப்படுகிறது, இந்த விவகாரத்தில் அப்பல்லோ மருத்துவமனை பதில்கள் அனைத்தும் முன்னுக்குப்பின் முரணாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார் தமிழக அரசு வழக்கறிஞர்.

அதிலும் குறிப்பாக விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு ஒரு வருட காலம் விசாரணைக்கு ஆஜரான பின்னர்தான் அப்பல்லோ சார்பாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் அப்பல்லோ மருத்துவர்கள் 50க்கும் அதிகமானோர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரணை செய்யப்பட்டார்கள் என்று கூறியிருக்கிறார் வழக்கறிஞர்.

அவருடைய இந்த வாதத்தை கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆறுமுகசாமி ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்று விசாரணை முடிவதற்கு முன்பாகவே நீங்கள் எவ்வாறு தெரிவித்துக் கொள்ள இயலும்? ஆனாலும் தன்னுடைய விசாரணையை நடத்தி முடித்து அறிக்கையை சமர்ப்பித்த பின்னர் தான் என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள இயலும், அப்போதுதான் ஒரு தலை பட்சமா என்ற விவகாரத்தை முன் கொண்டுவர வேண்டும் ஆகவே மருத்துவமனை தரப்பில் இப்போதே ஒருதலைப்பட்சம் என்று தெரிவிப்பதை ஏற்றுக்கொள்ள இயலாது என்று கூறி வழக்கை ஒத்தி வைத்து இருக்கிறார்கள்.

ஆனால் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பாக தொடர்ந்து ஆறுமுகசாமி ஆணையத்திற்கு நெருக்கடி கொடுக்கும் விதத்தில் உச்ச நீதிமன்றத்தை நாடி இப்படி பல பிரச்சனைகளை எழுப்புவதை பார்த்தால் நிச்சயமாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் அந்த மருத்துவமனை நிர்வாகத்திற்கு ஏதோ ஒரு வகையில் பங்கு இருக்கலாம், அல்லது அவருடைய மரணத்திற்கு அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்தை யாரோ ஒருவர் கேடயமாக பயன்படுத்தி இருக்கலாம், என்பது உள்ளிட்ட சந்தேகங்களும் எழுகின்றன ஒருவேளை அது உண்மை என்ற பட்சத்தில் தான் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் இவ்வாறான குழப்பங்களை ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது என்பது உள்ளிட்ட கருத்துக்கள் தமிழகத்தில் பரவலாக உலவி வருகின்றன.