கூகுள் நிறுவனங்களுக்கு போட்டியாக அமையும் ஆப்பிள் நிறுவனம் !!!

0
201

தேடுபொறி உலகில் கொடிகட்டி பறக்கும் கூகுள் நிறுவனம் தற்போது இல்லையெனில், பலருக்கு தகவல்களை திரட்டுவது மிகப்பெரிய சவாலாக அமைந்துவிடும்.சகல விஷயங்களையும் விரல் நுனியில் கொண்டு சேர்க்கும் என்பதால் கூகுளுக்கு தேடுபொறி செயலிற்கு பயனாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

இந்நிலையில் பல கோடி லாபம் பெற்று வரும் தேடுபொறியை கூகுளுக்கு இணையாக உருவாக்கும் பணியில் ஆப்பிள் நிறுவனம் தற்போது இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்திற்கேன IOS,IPAD OS போன்ற DEFAULT SEARCH ENGINE சேவையை தொடர்ந்து தந்து வந்துள்ளது. இதுதொடர்பாக இரு நிறுவனங்களுக்கு இடையேயான ஒப்பந்தத்தை பிரிட்டன் அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

இந்நிலையில் எதிர்காலத்தில் தேடுபொறி சேவையை வழங்குவதில் சிக்கல் வரலாம் என கணித்த ஆப்பிள் நிறுவனம் , சொந்தமாகவே ஒரு தேடுபொறியை சேவைக்கு உருவாக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.