மாநில கட்சியாக தமிழக வெற்றிக் கழகம்.. வெளியான நியூ அப்டேட்!!

0
215
#image_title

Tamilaga Vettri Kazhagam: சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் முடிவு கடந்த ஜூன் 4 ஆம் தேதி வெளிவந்து பல மாற்றங்களை சந்தித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தை பொறுத்தவரை எதிர்பார்க்கப்பட்ட மற்றும் எதிர்பார்க்கப்படாத பல சுவாரசிய நிகழ்வுகளை தமிழக அரசியல் சந்தித்துள்ளது. அந்த வகையில் திமுக, அதிமுக, தேமுதிக போன்ற பிரபலமான கட்சிகள் மக்களவைத் தேர்தலை சந்தித்தாலும் நாம் தமிழர் போன்ற கட்சிகள் தனித்துப் போட்டியிட்டு மக்களின் கவனத்தை பெற்றன.

இந்த மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 8.19 சதவீத வாக்குகள் வாங்கியதால் மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்ற நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்று மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது. இது இந்த இரு கட்சிகளுக்கும் மக்கள் மத்தியில் அங்கீகாரத்தை பெற்றுள்ளது என்று தான் கூற வேண்டும்.

அந்த வகையில் சமீபத்தில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கியுள்ளார். கட்சி தொடங்குவதற்கு முன்பாகவே பல உதவிகளை மக்களுக்கு அவ்வப்போது விஜய் செய்து வந்தார். இந்நிலையில் விஜய் தேர்தல் கமிஷனில் அவரின் கட்சியை பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தை கடந்த பிப்ரவரியில் வழங்கி உள்ளார்.

அதன் பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர், பொருளாளர், இணை கொள்கை பரப்பு செயலாளர், தலைமை நிலைய செயலாளர் ஆகிய பதவிகளுக்கான நபர்களை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய் நியமித்திருந்தார்.

இந்த விபரங்கள் அனைத்தும் தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனை தேர்தல் கமிஷன் பெற்றுக்கொண்டது. மேலும் கட்சி தொடர்பான ஆட்சேபனை ஏதேனும் இருப்பின், வரும் 11-ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, ஆட்சேபனைகள் ஏதும் வராதபட்சத்தில் தேர்தல் கமிஷனால் நிலுவையில் வைக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் விண்ணப்பம் மாநில கட்சியாக பதிவு செய்து, மாதம் இறுதிக்குள் தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்!! மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை !!