Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சுருண்ட நரம்புகளை நொடியில் சரி செய்ய.. இந்த எண்ணெய் ஒரு ஸ்பூன் அங்கு அப்ளை செய்யுங்கள்!!

சிலருக்கு அடிக்கடி நரம்பு சுருட்டல் பிரச்சனை ஏற்படுகிறது.இந்த நரம்பு சுருட்டல் பாதிப்பில் இருந்து மீள கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணெயை தயாரித்து பயன்படுத்துங்கள்

நரம்பு சுருட்டல் அறிகுறி:

*பச்சை நரம்பு
*சீரற்ற இரத்த ஓட்டம்
*புண்கள் உண்டதால்
*கால் கருப்பு நிறத்தில் மாறுதல்

தேவையான பொருட்கள்:-

1)இலவங்கம்(கிராம்பு) – ஒரு தேக்கரண்டி
2)வெள்ளை பூண்டு பல் – இரண்டு
3)ஆலிவ் ஆயில் – மூன்று தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

1.முதலில் ஒரு தேக்கரண்டி அளவு இலவங்கம் அதாவது கிராம்பை எடுத்து உரலில் போட்டு பவுடர் பதத்திற்கு இடித்து வைத்துக் கொள்ளுங்கள்.

2.அடுத்து இரண்டு வெள்ளை பூண்டு பற்களை தோல் நீக்கிவிட்டு உரலில் போட்டு மைய்ய இடித்து வைத்துக் கொள்ளுங்கள்.

3.இப்பொழுது ஒரு கிண்ணத்தை எடுத்து இடித்து வைத்துள்ள இலவங்கப் பொடியை போட்டுக் கொள்ளுங்கள்.அடுத்து அரைத்த வெள்ளை பூண்டு பேஸ்டை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.

4.அடுத்து மூன்று தேக்கரண்டி அளவிற்கு ஆலிவ் எண்ணெய் ஊற்றி நன்றாக கலக்குங்கள்.பிறகு இதை டபுள் பாய்லிங் மெத்தடில் கொதிக்க வையுங்கள்.பின்னர் இதை ஆறவைத்து நரம்பு சுருண்ட இடத்தில் அப்ளை செய்து வந்தால் அவை சீக்கிரம் குணமாகிவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)பிரியாணி இலை – நான்கு
2)ஆலிவ் எண்ணெய் – நான்கு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

1.முதலில் நான்கு பிரியாணி இலையை உரலில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள்.

2.அடுத்து இந்த பிரியாணி இலை பொடியை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு நான்கு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் ஊற்றி ஊறவிடுங்கள்.

3.ஒரு வாரம் வரை ஊறவைத்து பிறகு இந்த எண்ணெயை நரம்பு சுருண்ட இடத்தில் அப்ளை செய்தால் அவை சீக்கிரம் குணமாகிவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)கற்றாழை ஜெல் – இரண்டு தேக்கரண்டி
2)கேரட் – ஒன்று
3)ஆலிவ் எண்ணெய் – மூன்று தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

1.முதலில் ஒரு கற்றாழை மடலை தோல் நீக்கிவிட்டு அதில் இருந்து ஜெல்லை மட்டும் தனியாக பிரித்தெடுத்துக் கொள்ளுங்கள்.

2.அடுத்து ஒரு முழு கேரட்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளுங்கள்.

3.பிறகு ஒரு பாத்திரத்தில் கற்றாழை ஜெல் மற்றும் கேரட் ஜூஸ் சேர்த்து கலந்துவிடுங்கள்.அடுத்து மூன்று தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயை அதில் ஊற்றி குறைவான தீயில் கொதிக்க வையுங்கள்.

4.தைலமாக வரும் வரை காய்ச்சி அடுப்பை அணைத்துவிடுங்கள்.பிறகு இதை ஆறியப் பின்னர் நரம்பு சுருண்ட பகுதியில் தடவுங்கள்.இதை தொடர்ந்து செய்து வந்தால் நரம்பு சுருட்டல் பாதிப்பில் இருந்து எளிதில் மீண்டுவிடலாம்.

Exit mobile version