Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இரவு படுக்கைக்கு செல்லும் முன் முகத்திற்கு தேங்காய் எண்ணெய் பூசுங்கள்!! ஒரு வாரத்தில் இத்தனை பலன்களை பெறுவீர்!!

நம் அனைவரது வீடுகளிலும் பயன்படுத்தப்படும் ஒரு அத்தியாவசிய எண்ணெயாக தேங்காய் எண்ணெய் உள்ளது.இந்த தேங்காய் எண்ணெய் தலைமுடி மற்றும் சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கும் முக்கிய அழகுப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.

தேங்காய் எண்ணெயை முகத்திற்கு அப்ளை செய்து வந்தால் வெடிப்பு மற்றும் வறண்ட சருமத்தை கட்டுப்படுத்தலாம்.தேங்காய் எண்ணையுடன் தயிர் சேர்த்து சருமத்தில் பயன்படுத்தி வந்தால் சரும ஆரோக்கியம் மேம்படும்.

டல்லடிக்கும் முகத்தை பளபளப்பாக மாற்ற விரும்புவர்கள் தேங்காய் எண்ணையில் பால் சேர்த்து முகம் முழுவதும் அப்ளை செய்து நன்கு மசாஜ் செய்து 20 நிமிடங்கள் கழித்து தண்ணீர் கொண்டு முகத்தை கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.கண்களை சுற்றி அரிப்பு,கண் எரிச்சல்,கண் சூடு போன்ற பிரச்சனைகளுக்கு ஆளானவர்கள் தேங்காய் எண்ணெயை புருவம்,இமைகள் மீது தடவினால் பிரச்சனை சரியாகும்.

உதடு வறண்டு இருந்தால் அதை மிருதுவாக வைக்க தேங்காய் எண்ணெயில் தயாரிக்கப்பட்ட லிப் பாம் பயன்படுத்தலாம்.இரவு நேரத்தில் முகத்தை கழுவி துடைத்த பிறகு சிறிது தேங்காய் எண்ணெயை அப்ளை செய்து மறுநாள் காலையில் முகத்தை கழுவினால் என்றும் இளமை பொலிவடன் இருக்கலாம்.

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள்,வடுக்கள்,கருவளையங்கள் மறைய தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம்.தொடர்ந்து தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி வந்தால் முகத்திற்கு பொலிவு கிடைக்கும்.சருமத்தில் உள்ள டெட் செல்கள் அழிய தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யலாம்.

இருப்பினும் எண்ணெய் பசை சருமம் இருப்பவர்கள் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.அதிக முகப்பரு இருப்பவர்கள் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

வெயில் காலத்தில் தேங்காய் எண்ணெய் சருமத்திற்கு அளவிற்கு அதிகமாக பயன்படுத்தினால் வெடிப்பு வரலாம்.முகத்தில் அதிகளவு முடி இருப்பவர்கள் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.தேங்காய் எண்ணெயை நேரிடியாக பயன்படுத்தாமல் கற்றாழை,ஹெர்பல் க்ரீம் போன்றவற்றுடன் மிக்ஸ் செய்து பயன்படுத்தலாம்.

Exit mobile version