தொழில் கல்வி படிக்க இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! அரசு அதிரடி அறிவிப்பு!
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து மாணவ மாணவிகள் தொழிற்கல்வி படிக்க இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 20ம் தேதி வரை நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் முடிவுகள் நேற்று அதாவது மே 19ம் தேதி வெளியானது. 9.2 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியதில் 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 94.66 சதவீதம் மாணவிகளும், 88.16 சதவீதம் மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர்.
இதையடுத்து தொழில் கல்வி படிக்க மாணவர்கள் அனைவரும் இன்று முதல் அதாவது மே 20ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. தொழில் கல்வி பயில விரும்பும் மாணவர்கள் அனைவரும் www.tnpoly.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். பகுதி நேர தொழில் கல்வி பயில விரும்பும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.