Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இன்று முதல் விண்ணப்பிக்கலாம் ! மருத்துவ பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு!

Apply from today! Announcement issued by the Medical Staff Selection Commission!

Apply from today! Announcement issued by the Medical Staff Selection Commission!

இன்று முதல் விண்ணப்பிக்கலாம் ! மருத்துவ பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு!

மருத்துவ பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் தமிழக அரசின் மருத்துவப் பணியில் 889 மருந்தாளுநர் பணியிடங்கள் நிரப்புவதற்காக இன்று முதல் வரும் 30ஆம் தேதி வரை www.mrp.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த பதவிகளுக்கான தேர்வு கணினி அடிப்படையில் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது. தேர்விற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அந்த அறிவியல் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தேர்வு விண்ணப்பைப் பேரின் வயது 1.7.2019 தேதியின்படி குறைந்தபட்ச 18 முதல் அதிகபட்சம் இருக்க வேண்டும் எனவும் அறிவித்துள்ளது.

மேலும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பார்மசியில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு பார்மசி கவுன்சிலர் பதிவு செய்திருக்க வேண்டும் எனவும் அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பதிவை புதுப்பித்து வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவித்துள்ளது.

மேலும் மருந்தாளர்களுக்கு சம்பளம் ரூ.35,400 முதல் ரூ.1,12,400 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது  எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் விவரங்களை www.mrp.tn.gov.in என்ற இணையதளம் பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.

Exit mobile version