தமிழக அரசானது வறுமைக்கோட்டுக்கு கீழிருக்கும் பெண்களுக்கு சுய தொழில் தொடங்க ரூ 50000 வழங்குவதாக தெரிவித்துள்ளது.
தமிழக அரசானது பெண்களுக்கு பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கழித்து குடும்ப அட்டை வைத்திருக்கும் பெண்மணிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்கும் கலைஞர் உரிமை திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. இதில் கிட்டத்தட்ட ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பயனடைந்து வருகின்றனர்.
தற்பொழுது பெண்கள் மறுவாழ்வு மையத்தில் இருப்பவர்கள் மற்றும் கார்ப்பரேஷன் ஊழியர் மனைவிகள் என அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்குவதாக தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி நலிவுற்ற கைவிடப்பட்ட பெண்மணிகளுக்கு ஐம்பதாயிரம் வழங்குவதாக கூறியுள்ளது. இத்திட்டமானது கணவனால் கைவிடப்பட்டவர்கள் ஆதரவற்ற பெண்மணிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனக் கூறியுள்ளனர்.
இத்திட்டம் போல பயனடைய விரும்பும் பெண்கள் அவரவர் மாவட்டத்தில் உள்ள சமூக நல அலுவலரை சந்தித்து விண்ணப்பிக்குமாறு தெரிவித்துள்ளனர். இத்திட்டமானது பின் தங்கிய பெண்மணிகளை பொருளாதாரத்தில் முன் கொண்டு வர சுயதொழில் தொடங்குவதற்கு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க கட்டாயம் 25 முதல் 45 வயது உட்பட்டு இருக்க வேண்டும் என்று வரைமுறை வகுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.