ஏழை எளிய மக்களுக்கு உயர் தர சிகிச்சை வழங்கும் நோக்கில் ஆயுஷ்மான் பாரத் யோஜனா (PMJAY) என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கி வைத்தது.இத்திட்டத்தின் மூலம் பயனாளிகள் ஆண்டிற்கு ரூ.5,00,000 வரை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியும்.
ஆனால் எல்லா மருத்துவமனைகளிலும் இந்த காப்பீட்டு அட்டை செல்லுபடியாகாது.அரசு பட்டியலிட்டுள்ள மருத்துவமனைகளில் மட்டுமே இலவச சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியும்.மத்திய அரசின் இந்த திட்டத்தால் ஏழை எளிய மக்கள்,முதியவர்கள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர்.இத்திட்டத்தின் மூலம் 12 கோடி குடும்பங்கள் இலவச சிகிச்சை பெற்றுள்ளனர்.புற்றுநோய்,இதய நோய்,சிறுநீரக நோய்,கண் புரை,மூட்டு வலி போன்றவற்றிக்கு இலவச காப்பீட்டு திட்டத்தின் மூலம் சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியும்.
ஆயுஷ்மான் பாரத் யோஜனா – ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி?
முதலில் மத்திய அரசின் https://pmjay.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை அணுகவும்.அடுத்து அதன் முதன்மை பக்கத்தில் உள்ள ‘ஏம் ஐ எலிஜிபில்” என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
பிறகு தொலைபேசி எண் மற்றும் கேப்ட்சாவை என்டர் செய்து ஜென்ரேட் OTP என்பதை கிளிக் செய்யவும்.அடுத்து உங்கள் மொபைல் எண்ணிற்கு வரும் OTP-ஐ என்டர் செய்தால் இந்த திட்டத்திற்கு தகுதியானவரா? இல்லையா என்பது தெரிந்துவிடும்.
நீங்கள் தகுதியுடையவராக இருந்தால் ஆதார்,பான் அட்டை,ஒட்டர் ஐடி,முகவரிச் சான்றிதழ் உள்ளிட்டவற்றை வைத்து ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.